திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்கு அதிர்ச்சிகரமான சம்பவம் மும்பையில் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது காதலன் ராகுலை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிரிந்து விடக்கூடாது பயத்தில், அவரிடமிருந்து 'விந்து தானம்' என்ற பெயரில் விந்தணுவை பெற்று, யூடியூப் வீடியோக்களைப் பார்த்து சுயமாக கர்ப்பமாகியுள்ளார்!
இந்த விசித்திரமான 'கிரைம் ஆஃப் பேஷன்' சம்பவம், போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் திருப்பங்களுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காதலர்கள் இறுதியில் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டாலும், இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனிதா, மகாராஷ்டிராவின் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர். இளங்கலை பட்டப்படிப்புக்காக மும்பைக்கு வந்தபோது, தனது சக மாணவனான ராகுலுடன் காதல் வயப்பட்டார். இருவரும் கல்லூரி காலம் முழுவதும் காதலில் மூழ்கியிருந்தனர்.
படிப்பு முடிந்த பிறகு, அனிதா தனது ஊருக்குத் திரும்பினாலும், வீடியோ கால் மூலம் தொடர்பில் இருந்தனர். ஆனால், ராகுலின் வீட்டில் வேறு பெண்ணுடன் திருமணம் பேசத் தொடங்கியது, அனிதாவின் உலகம் தலைகீழானது. "ராகுல் என்னைத் தவிர்க்கத் தொடங்கினான்.
அவன் வீட்டில் பெண் பார்க்கத் தொடங்கியதை அறிந்தபோது, என் உயிரே போய்விடும் போலிருந்தது," என்று போலீசிடம் அனிதா வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், ராகுலை எப்படியாவது தன்னுடன் இணைக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இறங்கினார் அனிதா.
ஆன்லைனில் 'விந்து தானம்' குறித்த விளம்பரங்களைப் பார்த்து, ஒரு திட்டம் தீட்டினார். ராகுலிடம், "விந்து தானம் உடல்நலத்துக்கு நல்லது, இது பெரிய புண்ணியம்" என்று சொல்லி, அவரை சம்மதிக்க வைத்தார் அனிதா. சில வாரங்களுக்கு முன்பு, ராகுல் தனது விந்தணுவை 'தானம்' என்ற பெயரில் அனிதா கொடுத்த முகவரிக்கு அனுப்பினார்.
அதன்பிறகு, யூடியூப் வீடியோக்களைப் பார்த்து, சுய இன்பம் மூலம் பெறப்பட்ட விந்தணுவை சரியான நேரத்தில் தனது உடலில் செலுத்தி, கர்ப்பமாகியுள்ளார்! "இது சாத்தியம்தான்" என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அனிதாவின் கூகுள் சர்ச் ஹிஸ்டரி மற்றும் யூடியூப் வாட்ச் ஹிஸ்டரியை சோதித்தபோது, 'ஹோம் இன்செமினேஷன்' (சுய கருத்தரிப்பு) குறித்த வீடியோக்கள் பார்த்தது தெரியவந்தது.
திடீரென கர்ப்பமாக இருப்பதாக அனிதா ராகுலுக்கு தகவல் தெரிவித்தபோது, அவர் அதிர்ச்சியடைந்தார். "நாங்கள் உடலுறவு கொண்டதே இல்லை! வீடியோ கால் மட்டும்தான்," என்று ராகுல் வாதிட்டார். ஆனால், மருத்துவ பரிசோதனையில் கர்ப்பம் உறுதியானது. போலீஸ் விசாரணையில், அனிதா முன்னுக்கு பின் முரண்பட்ட பதில்களை அளித்தார்.
இறுதியில், 'கிடுக்குப்பிடி' விசாரணையில் உண்மை வெளியானது."ஆமாம், நான் சில வாரங்களுக்கு முன் விந்து தானம் செய்தேன். ஆனால், இது இப்படி மாறும் நினைக்கவில்லை," என்று ராகுல் ஒப்புக்கொண்டார். அதிர்ச்சியில் உறைந்த அவர், "அனிதாவை பிரியும் எண்ணமில்லை. ஆனால், இந்த செயல் என்னை நம்ப முடியாமல் செய்து விட்டது" என்று கூறினார்.
இருப்பினும், போலீஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பேச்சுவார்த்தையில், இருவரும் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டனர். ஆனால், ராகுலின் தாய் மாமா ஒரு கண்டிஷன் போட்டார்: நடந்தது நடந்து விட்டது, எங்களை தவறாக நினைக்க வேண்டாம், குழந்தை பிறந்த பிறகு யார் மனதிலும் சந்தேகம் வந்து விடக்கூடாது. எனவே, டிஎன்ஏ சோதனை செய்வோம்.." என்று கூறுவது அனிதா மற்றும் அவரது பெற்றோர் சம்மதம். செய்தது.
"இது சினிமாவை மிஞ்சும் கதை. காதல் பயத்தில் எந்த அளவுக்கு செல்லலாம் என்பதற்கு உதாரணம்," என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சமூக வலைதளங்களில், "இது கிராமா? அல்லது காதலின் வெறித்தனமா?" என்ற விவாதங்கள் கொந்தளிக்கின்றன.
மருத்துவர்கள், சுய கருத்தரிப்பு முறைகள் பாதுகாப்பானவை அல்ல என்று எச்சரிக்கின்றனர். இந்த அதிர்ச்சிகரமான கதை, காதலர்களுக்கு ஒரு பாடம்: நம்பிக்கை மற்றும் தகவல் தொடர்பு இல்லாமல், காதல் எந்த வழிக்கும் செல்லலாம்! மேலும் விவரங்களுக்கு போலீஸ் விசாரணை தொடர்கிறது.
