கணவன் கண் முன் உடலுறவு.. தூங்கும் போது துடிதுடிக்க விசித்திரமான ஆசையை தீர்த்த மனைவி தீபிகா!

2019 ஆம் ஆண்டு ஆற்காடு பகுதியில் நடந்த எலக்ட்ரீஷியன் ராஜா மற்றும் அவரது ஒரு வயது மகன் பிரணீஸ்வரன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. மனைவி தீபிகாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை உட்பட ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 33 ஆண்டுகள் தண்டனை என நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்த ஜெயராஜ் என்பவர் எந்த தண்டனையும் இன்றி விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் தொடக்கம் 2019 ஆம் ஆண்டு. அப்போது 24 வயதான தீபிகா, தனது கணவர் ராஜா மற்றும் மகன் காணாமல் போனதாக ஆற்காடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.திருமணம் கணவர் மற்றும் மகனைக் காணும்போது ஏற்பட்ட பதட்டத்துடன் விடிய விடியாமல் ஸ்டேஷனுக்கு வந்த தீபிகா, உடனடி நடவடிக்கை கோரினார். போலீசார் எந்த சுணக்கமும் காட்டாமல் உடனே தீபிகா வீட்டுக்கு வந்து அக்கம் பக்கத்தினரிடமும், சொந்த பந்தத்தினரிடமும் விரிவான விசாரணை நடத்தினர். ஆனால் தொடக்க கட்டத்தில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், சாத்தூர் ஏரிக்கரையில் யாரோ உயிரிழந்ததாக போலீசுக்கு போன் தகவல் வந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், குறிப்பிட்ட இடத்தில் குழி தோண்டி பார்த்தனர்.
அங்கு ஒரே குழியில் ராஜா மற்றும் பிரணீஸ்வரன் ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ராஜாவின் தலை பகுதி அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்தது. ஆனால் மகனின் உடலில் எந்த வெளிப்புற காயமும் இல்லை. உடல்களைக் கண்ட தீபிகா உருண்டு புரண்டு அடித்து அழுதார். உடல்கள் போஸ்ட்மார்ட்டம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அங்கு சேகரிக்கப்பட்ட கைரேகை பதிவுகளில், புகார் கொடுத்த தீபிகாவின் கைரேகை மற்றும் மற்றொரு ஆணின் கைரேகை இருப்பது தெரிய வந்தது. இதனால் விசாரணை சூடுபிடித்தது. அடுத்த கட்ட விசாரணையில், ராஜா வீட்டில் இல்லாத நேரங்களில் சத்யாநகர் ஜெயராஜ் தீபிகா வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தீபிகா மற்றும் ஜெயராஜ் இருவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். விசாரணை முடிவில் முழு உண்மை வெளிப்பட்டது. தீபிகா, கணவர் ராஜாவுடன் திருமணமான பிறகு, அண்டைப் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜுடன் தகாத உறவு கொண்டிருந்தது தெரிய வந்தது.
கணவர் மற்றும் மகன் தங்களது உறவுக்கு இடையூறாக இருந்ததால், அவர்களை உயிருடன் தனியாக இருக்க தீபிகா முடிவு செய்தார். இந்த யோசனையை தனது காதலன் ஜெயராஜிடம் கூறியபோது, ​​அவர் சந்தோஷமாக சம்மதித்தார். இரவு 11 மணிக்கு மேல், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவரையும் மகனையும் உயிரிழக்கச் செய்த தீபிகா, ஜெயராஜை அழைத்து வந்தார். இருவரும் சேர்ந்து உடல்களை சாத்தூர் ஏரிக்கரையில் புதைத்தனர்.Parenting விடியும் முன்பே இந்த வேலையை முடித்துவிட்டு, தீபிகா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கணவர் மற்றும் மகன் காணாமல் போனதாக புகார் அளித்து, நல்ல மனைவியாக நடித்தார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, ராணிப்பேட்டை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதால், தீபிகாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மொத்தம் 33 ஆண்டுகள் தண்டனை என நீதிபதி உத்தரவிட்டார். உடந்தையாக இருந்த ஜெயராஜ் விடுதலை பெற்றார். இந்த தீர்ப்பு, குடும்ப உறவுகளின் நம்பிக்கை துரோகம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து மீண்டும் ஒருமுறை சிந்திக்க வைக்கிறது.

Post a Comment

Previous Post Next Post