உடலுறவில் பெண்களை திருப்தி படுத்த அது முக்கியமே அல்ல, இதை செய்தால் போதும்.. ரகசியம் உடைத்த மருத்துவர்!

தாம்பத்ய உறவு குறித்து தம்பதியினரிடையே பரவலாக நிலவும் தவறான யோசனைகள் மற்றும் அவற்றை சரிசெய்யும் வழிகாட்டுதல்கள் குறித்து, பிரபல தாம்பத்யம் உலவியல் மருத்துவ நிபுணர் அகிலா தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
இணையத்தில் குவிந்து கிடக்கும் ஆபாச உள்ளடக்கங்கள் காரணமாக ஆண்களிடையே உருவாகும் மாய பிம்பங்கள், பெண்களுக்கு தொல்லையை ஏற்படுத்துவதாகவும், இது விவாகரத்து வரை செல்லும் அபாயத்தை அதிகரிப்பதாகவும் அவர் எச்சரிக்கிறார். அகிலாவின் கூற்றுப்படி, பல ஆண்களுக்கு தனியுறுப்பு நீளமாகவும், தடிமனாகவும் இருந்தால்தான் பெண்களை தாம்பத்யத்தில் திருப்திப்படுத்த முடியும் என்ற தவறான எண்ணம் உள்ளது.
அதேபோல, உறவின் போது ஆழமாக உள்ளே செலுத்தி இயங்க வேண்டும் என்பதும் ஒரு பொதுவான நம்பிக்கை. இந்த கருத்துகளுக்கு முக்கிய காரணம், இணையத்தில் உள்ள ஆபாச படங்கள் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். "ஆபாச வீடியோக்களில் காணப்படும் காட்சிகளைப் பார்த்து, ஆண்கள் தங்களது வாழ்க்கைத் துணையுடன் அதேபோல செயல்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது ஒரு மாயைதான்," என்று அகிலா விளக்குகிறார்.
இத்தகைய தவறான அணுகுமுறைகள் காரணமாக, பெண்கள் தாம்பத்யத்தில் தொல்லைகளுக்கு ஆளாகி, மருத்துவ ஆலோசனை தேடி வருவது அதிகரித்துள்ளது. சில நேரங்களில், இது விவாகரத்து வரை செல்லும் அளவுக்கு மோசமடைகிறது. ஆனால், உண்மையில் தாம்பத்ய உறவு என்பது அன்பு, அரவணைப்பு மற்றும் அன்னியோன்யத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அகிலா வலியுறுத்துகிறார்.
"ஒரு ஆண் தனது துணையுடன் அன்பாகவும், காதலுடனும் உறவு கொண்டால் போதும். உறுப்பின் அளவு, நீளம், தடிமன் அல்லது கால அளவு போன்றவை கட்டாயமில்லை. இவை அனைத்தும் தவறான நம்பிக்கைகளே," என்று அவர் கூறுகிறார்.மேலும், 90 சதவீத பெண்களுக்கு, பிறப்புறுப்பின் வாய்ப்பகுதியில் உள்ள பகுதிகளைத் தூண்டுவதன் மூலமே உச்சகட்டம் அடைந்து விடுகிறார்கள் என்று அகிலா தெரிவிக்கிறார்.
இது அவர்களின் உடல்நிலைக்கு ஏற்ப மாறுபடும் – சிலருக்கு 5 நிமிடங்களிலும், சிலருக்கு 10 நிமிடங்களிலும் உச்சம். வெகு சில பெண்களுக்கு மட்டுமே ஆழமான உறவு விருப்பமாக இருக்கும், ஆனால் அனைவருக்கும் இது அசவுகரியம் அல்லது வலியை ஏற்படுத்தும். சிலர் கடுமையான உடல் உபாதைகளுக்கும் உள்ளாகலாம். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வாக, தம்பதியினர் மனம் விட்டுப் பேச வேண்டும் என்று அகிலா அறிவுறுத்துகிறார். "உங்கள் துணையின் எண்ணங்கள், விருப்பங்கள் என்பதைத் திறந்து பேசுங்கள். அதன் அடிப்படையில் உறவை மேற்கொள்ளுங்கள்.
இணைய வீடியோக்களை வைத்து செயல்பட்டால், விளைவுகள் விபரீதமாக இருக்கும்" என்று அவர் எச்சரித்தார். இதுபோன்ற திறந்த உரையாடல் மூலம் பல பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம் என்று அகிலா நம்பிக்கை தெரிவிக்கிறார். இன்றைய சமூகத்தில், தாம்பத்ய கல்வி மற்றும் சரியான வழிகாட்டல் இல்லாததால் ஏற்படும் இதுபோன்ற சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவது, தவறான தகவல்களைத் தவிர்ப்பதும் அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post