விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி 2 சீரியலில் மைனா என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நந்தினி. இந்த சீரியலுக்குப்பின் அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து வந்த நந்தினி, சினிமா படங்களிலும் சீரியல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.
பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டு 103 நாட்கள் வீட்டில் இருந்து பின் வெளியேறினார். தற்போது தனது கணவர் லோகேஷ்வரனுடன் கில்லாடி ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் தனது சகோதரர் திருமணத்தை பிரம்மாண்டமான முறையில் நடத்தி முடித்தார். இந்நிலையில் மைனா நந்தினியும் அவரது கணவரும் உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறியுள்ளனர்.
கோவிலுக்கு சென்று எடுத்த அவர்களின் புகைப்படத்தை பார்த்த பலரும் உங்களுக்கு என்ன ஆச்சு என்ற கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
