விஜய்யும், சங்கீதாவும் தொடர்ந்து சேர்ந்து வாழப்போகிறார்களா இல்லையா என்பது இன்னும் சில காலத்தில் தெரிந்துவிடும்.
ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் விசாரணையில் ஆஜராகி; சங்கீதாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் என சொல்லமாட்டாரா என்று விஜய்யின் ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தேர்தல் வேலைகளில் ஈடுபட அவர்கள் ஆர்வமாக இருந்தாலும்; விஜய்யின் செயல்கள் ஒன்றும் அவ்வளவு வேகமாக இல்லை எனவும் புலம்புகிறார்கள்.
விஜய்யை காதலித்து திருமணம் செய்த சங்கீதா திடீரென பெரிய குண்டையே கடந்த மாதத்தில் தூக்கி போட்டார். மேலும், நடிகை ஒருவருடன் தனது கணவருக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சொல்லி புது அணு ஆயுதத்தையும் ஏவினார். அத்தனைக்கும் விஜய்யின் ரசிகர்களும், தவேக தொண்டர்களும் அசராமல் முட்டு கொடுத்தார்கள். சங்கீதாவை பற்றியே எவ்வளவு தரக்குறைவாக பேச முடியுமோ அவ்வளவு தரக்குறைவாக பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வளைகாப்புக்கு சென்ற விஜய்: மேலும், திரிஷாவுடன் ஜோடி போட்டு வந்ததில் வேறு அவர் மீது அதிர்ச்சி நிலவி அந்த தேர்தலில் பாதிக்குமோ எனவும் அவர்கள் அஞ்சுகிறார்கள். இருந்தாலும் அத்தனை வெளியேயும் காட்டிக்கொள்ளாமல் தேர்தல் வேலைகளை செய்ய ஆர்வமாக உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் காந்தி மாதிரி கிராமம் கிராமமாக விஜய் செல்வார் என ஆதவ் அர்ஜுனும் தன் பங்குக்கு ஹைப்பை ஏற்றி வைத்திருந்தார். ஆனால் அவர் வீதியாக செல்லாமல் ஃப்ளைட்டை பிடித்து வளைகாப்புக்கு சென்றார்.
சுணக்கத்தில் தொண்டர்கள்: அதை பார்த்து ஆர்வமாக இருக்கும் தொண்டர்களும் சுணங்கி போக ஆரம்பித்திருக்கிறார்கள் என கிரவுண்ட் ரிப்போர்ட் கூறுகிறது. போதாக்குறைக்கு அவ்வப்போது திரிஷா, சங்கீதா உள்ளிட்டோரும் விஜய் வாழ்க்கையில் விளையாடுவதையும் பீதியுடன் நினைத்து பார்க்கிறார்களாம். அத்தனையையும் தாண்டி இந்தத் தேர்தலில் பெரிய வெற்றியை விஜய்க்குக் கொடுத்து கோட்டைக்குள் ஒரு மக்கள் பிரதிநிதியாக அனுப்ப வேண்டும் எனவும் ஆசைப்படுகிறார்கள்.
குளிக்கும் நேரம்.. மிகப்பெரிய துரோகம்.. ஹார்ட் பிரேக்.. திரிஷா ஓபன்.. என்ன செஞ்சிருக்காங்க பாருங்க?
குளிக்கும் நேரம்.. மிகப்பெரிய துரோகம்.. ஹார்ட் பிரேக்.. திரிஷா ஓபன்.. என்ன செஞ்சிருக்காங்க பாருங்க?
ஒத்துழைப்பாரா விஜய்?: இப்போது விஜய் செய்ய வேண்டியது ஒன்றுதான். அது கட்சி தலைவராக சுறுசுறுப்பாக இயங்குவது மட்டும்தான். ஏற்கனவே சங்கீதா பிரச்னையில் உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர். போதக்குறைக்கு அவரும் தன் பங்குக்கு திரிஷாவுடன் ஜோடியாக வந்து போட்டு தாக்கினார். அதையும் இவர்களே தாங்கினார்கள். இப்படி சதா விஜய் குறித்து பேசும் சிலர்; அவர் மற்றும் சங்கீதா பற்றிய பழைய வீடியோவை ஷேர் செய்துவருகிறார்கள்.
விஜய்யின் வீடியோ: தற்போது ஒரு வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் திருமணத்துக்கு முன்பு ஒரு விழாவில் பேசுகையில், "எனது வருங்கால மனைவி சங்கீதா பற்றி சொல்ல வேண்டுமென்றால்" என சொல்லி அநியாயத்துக்கு வெட்கப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அட கூச்சப்படாம சொல்லுங்க என சொல்ல; அதற்கு விஜய்யோ, 'நான் ஏன் பயப்படணும். அப்பா, அம்மா பார்த்த பொண்ணுதானே.. அதான் அவங்க இருக்காங்களே' என கூறினார். மேலும், அவங்க தமிழ் பொண்ணு. லண்டனில் செட்டிலாகிவிட்டாங்க. மெடிக்கல் சயின்ஸ் இறுதி ஆண்டு படிக்கிறாங்க' என்றிருக்கிறார். இந்த வீடியோ அதிகம் பேரால் பகிரப்படுகிறது.
