கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அக்ரஹாரம் பகுதியில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், மனைவி இந்து சன்னி (33) மற்றும் அவரது கல்லக்காதலன் (38) ஆகிய இருவருக்கும் ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர் சோலை பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜசேகர் (30) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த இந்து சன்னியை (33) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஓசூர் அக்ரஹாரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
அப்பகுதியைச் சேர்ந்த 38 வயதான லிண்டோவுடன் இந்து சன்னிக்கு பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் படிப்படியாக திருமணத்துக்கு மீறிய உறவாக மாறியது. இந்த உறவைத் தொடர தடையாக இருந்த கணவர் ஜஸ்டின் ராஜசேகரை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர்.
2017-ம் ஆண்டு இரவு:
வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஜஸ்டின் ராஜசேகரை, மனைவி இந்து சன்னியும், அவரது கல்லக்காதலன் லிண்டோவும் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
பின்னர் அந்த நள்ளிரவு யாருக்கும் தெரியாமல் அருகில் உள்ள மத்திகிரி சுடுகாட்டிற்கு கணவனின் சடலத்தை எடுத்துச்சென்று புதைத்து விட்டு, சாதாரணமாக வாழ்ந்து வந்திருக்கிறாள் இந்த அசிங்கம் பிடித்த இந்து சன்னி.
சில நாட்களில் ஜஸ்டின் வீட்டில் இல்லாததைக் கவனித்த அக்கம் பக்கத்தினர், இந்து சன்னியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணான பதில்களை அளித்தார்.
சந்தேகமடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில், இந்து சன்னியும் லிண்டோவும் சேர்ந்து கணவரைக் கொலை செய்து உடலைப் புதைத்தது தெரியவந்தது.
இந்து சன்னியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மத்திகிரி சுடுகாட்டில் இருந்த ஜஸ்டின் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சந்தோஷ் நீதிபதி நேற்று (ஏப்ரல் 21) தீர்ப்பளித்தார். இந்து சன்னி மற்றும் லிண்டோ ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் தீர்ப்பு ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்துக்கு மீறிய உறவுக்காக கணவரைக் கொலை செய்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
