பிரபல நடிகை அனுகிரகா, ஜியோ ஹாட்ஸ்டார் தமிழில் வரும் சீரியலில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஒரு உணர்ச்சிகரமான வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
“குலோபல் வில்லேஜர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனம் தன்னை ஒரு வருட ஒப்பந்தத்தில் சிக்க வைத்து, பணம் கொடுக்காமல், படப்பிடிப்பை நடத்தாமல், பிற படங்களில் நடிக்க தடை விதித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வீடியோவில் அனுகிரகா தனது அனுபவத்தை விரிவாகப் பகிர்ந்துள்ளார். “ரிசார்ட்ன்னு சொல்லி ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒரு சீரியஸ் செய்து கொண்டிருக்கிறேன்.
எனது கேரக்டர் பெயர் ஸ்ரீநிதி. ஆரம்பத்தில் சொன்னதும் இப்போது நடப்பதும் மிகவும் வித்தியாசமாக உள்ளது” என்று அவர் தொடங்கினார், கடந்த நான்கு மாதங்களாக இந்தப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது.
ஒப்பந்தம், வாக்குறுதி... ஆனால் யதார்த்தம் வேறு
எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் விஜய்குமார் மூலம் அணுகப்பட்டதாகவும், அவரது டீம் நல்லது என நம்பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அனுகிரகா தெரிவித்தார்.
“ஒரு வருட ஒப்பந்தம் போட்டு என்னை லாக் செய்துவிட்டனர். ஆனால் நான்கு மாதங்களாக எந்த வேலையும் இல்லை. படப்பிடிப்பு என்று சொல்லி 1 முதல் 15 தேதிகளுக்குள் காத்திருக்கச் சொல்வார்கள். ஆனால் ஷூட் இருக்காது. அதனால் பணமும் வரவில்லை” என்றார்.
மேலும், “எனக்கு ஜியோ ஹாட்ஸ்டாரில் இருந்து வேறொரு பெரிய சீரியஸ் அழைப்பு வந்தது. அதற்குச் செல்ல அனுமதி கேட்டபோது, ‘உங்களுக்காக பெரிய கேரக்டர் பிரேம் செய்திருக்கிறோம். ஸ்ரீநிதி ஆன் ஆஃப் தி லீட்’ என்று சொல்லித் தடுத்தனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பணப் பிரச்னை, உடல்நிலை சரிவு
தொடர்ந்து பணம் வராததால் தனது நிதி நிலைமை மிகவும் மோசமடைந்ததாக அனுகிரகா சொன்னார். “நான் ஸ்டார்விங். எதுவும் சாப்பிடவில்லை. கேஷியர் கண்ணனிடம் பேசினேன்.எந்த பதிலும் இல்லை” என்றார்.
எருமசாணி விஜய்குமாரிடம் பேசியபோது, “நான் வலிப்பு வந்து, ஹாஸ்பிடலில் இருக்கிறேன் என்று சொன்னதும், ‘அப்படியானால் இனி வர வேண்டாம், இந்த வெப் சீரியலில் நடிக்க வேண்டாம்’ என்று மனசாட்சியே இல்லாமல்பதிலளித்தார்” என அவர் கூறினார்.
மேலும், தனது நண்பர் எழுப்பிய கேள்விக்கு விஜய்குமாரின் மனைவி நகாஷ்த்ரா மூர்த்தி அளித்த பதில் மிகவும் அவமானகரமானதாக இருந்ததாக அனுகிரகா தெரிவித்தார். “உனக்கு வேணும்னா கல்யாணம் பண்ணி கூட வச்சிக்கோ.. இல்லனா மூடிக்கிட்டு வந்து இந்த கேரக்டர பண்ண சொல்லுடா ம*று” என்று பெண் கலைஞர்களை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
படப்பிடிப்பு தளத்தில் சுகாதாரக் குறைபாடு
அனுகிரகா மேலும் கூறியதாவது: “புரோட்டக்ஷனில் சுகாதாரம் இல்லை. உணவு தயாரிப்பது மிகவும் அசுத்தமாக உள்ளது. வண்டி வரும் அளவுக்கு உள்ளது. ஒரு கலைஞரை மனிதராக நடத்தும் அடிப்படை அறிவுகூட அவர்களுக்கு இல்லை” என்றார்.
“கனவு காண்பவர்களை ஏமாற்றாதீர்கள்”
தான் ஒரு சாதாரண கிராமத்தைச் சேர்ந்தவள் என்றும், கேரளாவில் இருந்து சென்னைக்கு மூன்று முறை ஆடிஷன் கொடுத்து வந்ததாகவும் அனுகிரகா நினைவுகூர்ந்தார்.
“நிறைய கலைஞர்கள், குறிப்பாக புதுமுகங்கள், இப்படி ஏமாற்றப்படுகிறார்கள். நான் கோர்ட்டுக்குப் போக முடியாது. எனக்கு பலமும் இல்லை. ஆனால் சமூக ஊடகத்தின் மூலம் எனது அநீதியைப் பகிர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்” என்று உணர்ச்சிப் பொங்கக் கூறினார்.
"எப்போதும் ஒரு பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படி நடக்கவில்லை" என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
இந்தச் சம்பவம், தமிழ் வெப் தொடர் துறையில் கலைஞர்களின் பாதுகாப்பு, ஒப்பந்த நிபந்தனைகள், பணம் செலுத்துதல் மற்றும் படப்பிடிப்பு தள சுகாதாரம் ஆகியவை குறித்து மீண்டும் விவாதம் எழுப்பியுள்ளது.
பல இளம் கலைஞர்கள் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வதாகக் கூறும் பின்னணியில், அனுகிரகாவின் புகார் முக்கியத்துவம் பெறுகிறது.
