4 மாத சிசு என்னோட வயிற்றுலயே அழிஞ்சு போச்சு.. ஒரு நைட்டுக்கு 500 ரூபாய்.. தனது கஷ்டங்களைச் சொன்ன கெனிஷா!
ரவி மோகன் விவகாரத்தில் கெனிஷாவை தரக்குறைவாகவும், கேவலமாகவும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இதையெல்லாம் கவனித்து வந்த கெனிஷா, தன்னை விமர்சிப்பதற்கு முன்பு தான் யார் என்பதைத் தெரிந்து கொண்டு விமர்சியுங்கள் என்று அவர் வெளியிட்ட விரிவான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், "நான் என் அம்மாவை 2013-ல் இழந்தேன், அப்பா 2017-ல் இறந்துவிட்டார். நான் நான்காம் வகுப்பு படிக்கும்போதே என் உறவினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். எனக்கு சுமார் 18, 19 வயதிருக்கும்போது திருமணம் நடந்தது. அப்போது எனக்கு விவரம் தெரியாது.
திருமணத்திற்குப் பிறகு என் கணவர் என்னை மிகவும் மோசமாகத் தாக்கினார். அதனால், என் வயிற்றில் இருந்த நான்கு மாதக் குழந்தை இறந்துவிட்டது. என் அடிவயிற்றில் இருந்து இரத்தம் வந்து கொண்டே இருந்தது. அந்த வலியிலிருந்து என்னால் மீளவே முடியவில்லை. என் அம்மா, அப்பா, குழந்தை என எல்லாரையும் இழந்துவிட்டேன். பின்னர் அந்த திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.
என்னை நான் உறுதியாக மாற்றிக்கொள்ள ஆரம்பித்தேன். ஆமாம், நான் பார்களில் பாடியிருக்கிறேன். அதில் என்ன தவறு இருக்கிறது? நான் பாரில் பாடுவதற்கு ஒரு இரவுக்கு 500 ரூபாய் கொடுப்பார்கள். அதுவே எனக்கு பெரிய விஷயம். அதை நான் கஷ்டப்பட்டு சம்பாதித்திருக்கிறேன்.என்னைப் பற்றி பேசுபவர்களுக்கு அறிவே இல்லையா என்று தோன்றுகிறது. எனக்கு நான்கு, ஐந்து குழந்தைகள் இருப்பதாக சொல்கிறார்கள். நான் ஆன்ட்டி என்றும், என் அப்பாவை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு ரவி மோகனுடன் சுற்றுகிறேன் என்றும் என்னென்னவோ கூறுகிறார்கள். உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவில்லையா? நானும் ரவி மோகனும் உங்கள் கண் முன்னால் தானே இருக்கிறோம். நாங்கள் வேறு நாடுகளுக்கு ஓடிப்போகவில்லையே? பிறகு ஏன் இப்படி பேசுகிறீர்கள்?
ரவி மோகன் என்னை சந்தித்தபோது மனதளவில் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருந்தார். நான் அவருக்கு ஒரு ஆலோசகராக சில அறிவுரைகள் சொன்னேன், அவ்வளவுதான். எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டது. ரவி மோகன் குடும்பத்தை கெடுக்க ஒரு குழந்தையை வயிற்றிலேயே இழந்த பெண் நினைப்பாளா? தயவுசெய்து உங்கள் வாழ்க்கையில் முன்னேற உங்களுக்கு தேவையான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்" என்று பேசியுள்ளார்.
