"500 to 2500 பெண்களோடு உல்லாசம்" "Choosing " சொன்னதும் வரிசையாக வந்து நின்ற இளம் பெண்கள்...

நகரில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில் ‘மசாஜ்’ என்ற பெயரில் பாலியல் வியாபாரம் நடைபெறுவதாக வழக்கறிஞர் ஒருவர் வீடியோ ஆதாரங்களுடன் போலீஸில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஸ்பா மையத்தில் இளம் பெண்கள் பலர் ஈடுபட்டுள்ளதாகவும், இளைஞர்களை ஈர்த்து பணம் பறித்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. வழக்கறிஞரின் புகாரின்படி, ஸ்பா மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் முதலில் மசாஜ் சேவைக்கு பணம் வசூலிக்கப்படுகிறது. பின்னர், பாலியல் தேவைக்காக தனியாக கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி, வாடிக்கையாளருக்கு ‘ஆப்ஷன்’ கொடுக்க வேண்டும். "சூஸ் செய்யுங்கள்" என்று சொன்னதும், அறையில் இருந்த ஆறு இளம் பெண்கள் வரிசையாக வந்து தங்கள் உடல் அழகை வாடிக்கையாளருக்கு காட்டி நிற்பதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளருக்கு யார் பிடித்திருக்கிறாரோ அந்தப் பெண்ணைத் தேர்வு செய்து, அன்று முழுவதும் உல்லாசமாக இருக்கலாம் என்றும், அதற்கு தனியாக பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பல இளம் பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பதும், சட்டத்துக்கு புறம்பான வழிகளில் பணம் சம்பாதிப்பதும் வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புகாரின் அடிப்படையில் சென்னை போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். வீடியோ ஆதாரங்களை ஆதாரமாகக் கொண்டு சம்பந்தப்பட்ட ஸ்பா மைய உரிமையாளர், ஊழியர்கள் மற்றும் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த நெட்வொர்க்கில் வேறு ஏதேனும் ஸ்பா மையங்கள் ஈடுபட்டுள்ளன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை நகரில் ஸ்பா, மசாஜ் மையங்கள் என்ற பெயரில் நடைபெறும் சட்டவிரோத பாலியல் வியாபாரத்துக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post