ஒரு குடும்பத்தில் செல்வம், வசதி, ஆடம்பரம், பொருளாதார வளம் ஆகியவை பெருக வேண்டுமென்றால் உழைப்பு மட்டும் போதாது. உழைப்புக்கு ஏற்ற வருமானம், தடையில்லா வளர்ச்சி, தொழில் வெற்றி, பணி உயர்வு என அனைத்தும் ஒருங்கிணைந்து வர வேண்டும். இதற்கு ஜோதிட சாஸ்திரம் ஒரு எளிய, ஆனால் மிக நுட்பமான ரகசியத்தைச் சொல்கிறது – சனி சுக்கிரன் சேர்க்கை.
பொதுவாக, சுக்கிரன் என்பது செல்வம், வசதி, ஆடம்பரம், அழகு, மகிழ்ச்சி, சுகம், வாசனை ஆகியவற்றின் காரகன். சனி என்பது உழைப்பு, கர்ம வினை, தொழில், ஆயுள் ஆகியவற்றின் அதிபதி.
இரண்டும் இணையும்போதுதான் உழைப்பு செல்வமாக மாறுகிறது. ஜாதகத்தில் சனி-சுக்கிரன் சேர்க்கை இருந்தால் அந்த நபர் உழைக்கும் அளவுக்கு வருமானம் உடனடியாகக் கிடைக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது.
ஆனால் இந்த சேர்க்கையை ஜாதகத்தில் மட்டும் நம்பி இருக்க தேவையில்லை. நம் உடல் உறுப்புகளிலேயே இந்தக் கிரகங்களின் ஆதிக்கம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி வீட்டிலேயே இந்த சேர்க்கையை உருவாக்க முடியும். அதுதான் இந்த ரகசியப் பரிகாரம்.
சுக்கிரனும் சனியும் உடல் உறுப்புகளில் எங்கே?
சுக்கிரன்: பெண்களுக்கு கன்னங்கள் மற்றும் கருப்பை. ஆண்களுக்கு விந்தணு.
சனி: ஆண்களுக்கு பாதம், கன்னம், நடுவிரல், இறைப்பை.
ஒரு கணவன் சனியின் ஆதிக்கம் நிறைந்த தன் நடுவிரலால் (சனியின் உறுப்பு) தன் மனைவியின் சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த கன்னத்தை (சுக்கிரனின் உறுப்பு) வருடும்போது, உடல் அளவில் சனி-சுக்கிரன் சேர்க்கை உருவாகிறது.
இந்தத் தொடுதலில் கிரகங்கள் ஒன்றிணைகின்றன. அப்போது சுக்கிரன் தன் கடமையைச் செய்யத் தொடங்குகிறான் – அதாவது செல்வத்தை அள்ளித் தருகிறான்.
எப்படி செய்ய வேண்டும்? எளிய முறை
கணவன் தன் வலது கையின் நடுவிரலால் மனைவியின் இரண்டு கன்னங்களையும் மென்மையாக, அன்புடன் வருட வேண்டும். இது ஒரு சடங்கு அல்ல, அன்பான தொடுதல். ஆனால் இந்தத் தொடுதலில் கிரக சேர்க்கை நிகழ்கிறது. இதை தினசரி அல்லது வாரம் ஒரு முறையாவது செய்து வரலாம்.
பரிகாரம் பலிக்க வேண்டுமென்றால் மனைவி இப்படி இருக்க வேண்டும்
இந்தப் பரிகாரம் எல்லோருக்கும் பலிக்காது. சில நிபந்தனைகள் உண்டு:
1. மகிழ்ச்சி: மனைவி வீட்டில் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும், மன அமைதியுடனும் இருக்க வேண்டும்.
2. சுத்தம்: உடல் சுத்தமாகவும், நறுமணம் மிக்கவராகவும் இருக்க வேண்டும்.
3. அழகு: விலை உயர்ந்த மேக்கப் அல்ல, எளிய அழகு – நன்றாகக் குளித்து, பிடித்த ஆடை அணிந்து, தூய்மையாக இருப்பது போதும்.
4. அமைதி: கோபம், அழுகை, மன அழுத்தம் இல்லாத நிலை.
ஏன் இந்த நிபந்தனைகள்?
சுக்கிரன் அழகு, சுத்தம், அமைதி, மகிழ்ச்சி, வாசனைக்கு உரிய கிரகம். பெண் அழும்போது அவள் கண்ணீர் முதலில் கன்னத்தைத் தொடுகிறது. அப்போது சுக்கிரன் தன் பலனைத் தர முடியாமல் தவிக்கிறான்.
அதனால் “பெண்கள் அழக்கூடாது” என்று பெரியவர்கள் சொல்வார்கள். அழுகை வந்தால் செல்வம் கரையும்; மன அமைதி இல்லாவிட்டால் செல்வம் தங்காது என்று ஜோதிடம் எச்சரிக்கிறது.
ஒரு வீட்டுல பொம்பள ஆளு சரியில்லனா, அந்த குடும்பத்துக்கு வராதுங்க.. வீட்டில் பெண்கள் மேலே குறிப்பிட்ட நான்கு அம்சங்களான மகிழ்ச்சி, அழகு, சுத்தம், அமைதி இல்லாமல் இருப்பது தான் பொம்பள ஆளு சரியில்ல என்று சொல்வது.
இந்த நான்குமே ஒரு பெண்ணுக்கு கிடைக்க நம் முன்னோர்கள் சுக்கிரனின் கிழமையான வெள்ளிக்கிழமை கடவுள் வழிபாட்டை கற்றுக்கொடுத்தார்கள்.
ஆனால், இன்று வெள்ளிக்கிழமை தலை குழைத்து, கோயிலுக்கு செல்லும் பெண்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேட வேண்டிய சூழலில் இருக்கிறோம்.. இது வேறு கதை. வாங்க நம்ம விசயத்துக்குள் போவோம்..
இந்தப் பரிகாரத்தால் கிடைக்கும் பலன்கள்
உழைப்புக்கு ஏற்ற வருமானம் உடனடியாகக் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் நஷ்டம் வராது.
வேலையில் பணி உயர்வு, சம்பள உயர்வு தடையின்றி வரும்.
எந்த வேலையைத் தொடங்கினாலும் வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் செல்வம் பெருகும், ஆடம்பர வாழ்க்கை அமையும்.
சனி-சுக்கிரன் சேர்க்கை வலுவடைவதால் கர்ம வினைகளும் சரியாக அமையும்.
ஜோதிடத்தின் நுட்பமான சூட்சுமம்
ஜோதிடம் கிரகங்களை வெறும் வானியல் பொருள்களாக மட்டும் பார்க்கவில்லை. அவை நம் உடல், மனம், உறவுகள், செயல்கள் அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கருதுகிறது.
இந்தப் பரிகாரம் அதன் உச்சகட்ட நுட்பம். உடல் தொடுதல் மூலம் கிரகங்களை இணைத்து, பொருளாதார வளத்தை உருவாக்கும் அற்புதமான முறை.
இன்றைய நவீன உலகில் பணம் சம்பாதிப்பது மட்டும் போதாது; அதைத் தக்க வைத்து, பெருக்குவதும் முக்கியம். இந்த எளிய பரிகாரத்தை நம்பி, மனைவியை மகிழ்ச்சியாக வைத்து, அன்புடன் அவள் கன்னத்தை நடுவிரலால் வருடுபவர்களுக்கு ஜோதிடம் உறுதியளிக்கிறது – உங்கள் உழைப்பு வீண் போகாது; செல்வம் உங்கள் குடும்பத்தைச் சூழ்ந்து கொள்ளும்.
இந்த ரகசியத்தை இன்று எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும். உங்கள் வீட்டில் பெண் மகிழ்ச்சியாக, சுத்தமாக, அழகாக இருக்கும்போது, கணவன் அவள் கன்னத்தை நடுவிரலால் வருடினால் – சனி சுக்கிரன் சேர்க்கை உருவாகி, செல்வ வளம் பெருகும்.
இது ஜோதிட நம்பிக்கையாளர்களுக்கு ஒரு எளிய, அன்பான, வாழ்க்கையை மாற்றும் பரிகாரம். முயற்சி செய்து பாருங்கள். உங்கள் குடும்பம் செல்வச் செழிப்புடன் வாழட்டும்!
