மனைவியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் - கணவர் கொலை முயற்சி வழக்கில் தேடப்படுகிறார்
தஞ்சை மாவட்டம் வாட்டாத்திக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான ராஜா தர்மராஜா என்பவர், தனது மனைவி என்கிற அட்சயா (35) மீது மற்றொரு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், அவரை காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ராஜா தனது நான்கு வயது மகனையும் அழைத்துச் சென்றதால், அவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி
ராஜா டிரைவராக வந்தார். அவரது மனைவி அட்சயாவுடன் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வரை திருச்சியில் வசித்து வந்தார்.
அப்போது அட்சயாவுக்கும் திருச்சியைச் சேர்ந்த ஜோசப் என்கிற நபருக்கும் இடையே தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜா தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி வீடியோவை பதிவேற்றினார்.
அந்த வீடியோவில் அவரது மனைவியும், மற்றொரு நபரும் ஒரே அறையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதைப் பார்த்த ராஜா, தனது மொபைலில் வீடியோ பதிவு செய்தபடி “அவனை வெளிய வரச் சொல்லு... என்ன டிரஸ் இது?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பின்னர் அந்த நபர் வெளியே வந்ததாகவும், ராஜா அவரிடம் “என் பொண்டாட்டியுடன் நீ எப்படி நைட் ஸ்டேட் பண்ணினாய்?” என்று கேட்டதாகவும் கூறினார்.
குடும்பம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள்
இதைத் தொடர்ந்து ராஜா தனது மகனுடன் பேசும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.
அதன் பின் இரத்தக்கறை படிந்த உடையுடன், அழுதபடி மற்றொரு வீடியோவை வெளியிட்டார். அதில், “தமிழக காவல் துறைக்கு வணக்கம்... இன்று என் குடும்பமே அழிந்து போச்சு.என் பிள்ளையை என்னுடன் சேர்த்து சாகப் போறேன்.
என் பொண்டாட்டியை கிழிச்சு போட்டுவிட்டு வந்துவிட்டேன். இதற்கெல்லாம் காரணம் திருச்சி தென்னூர் சங்கீதபுரத்தைச் சேர்ந்த ஜோசப் தான். அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுங்கள்” என்று தெரிவித்தார்.
சம்பவம் மற்றும் போலீஸ் நடவடிக்கை
தகவல் அறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அட்சயாவை மீட்டு முதலில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இச்சம்பவத்தில் ராஜா மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரையும், அவருடன் சென்ற நான்கு வயது மகனின் நலனையும் உறுதி செய்யும் வகையில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பிரச்னைகள் மற்றும் சந்தேகம் காரணமாக ஏற்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த வழக்கின் முழுமையான விசாரணையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
Crime
