கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்திய அளவில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் Do You Wanna Partner எனும் வெப் தொடர் வெளிவந்தது.
ஆனால், இந்த வெப் தொடருக்கு பெரிதளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. தமன்னா நடிப்பில் அடுத்து ரோமியோ, ரேஞ்சர், வ்வன், ரோஹித் ஷெட்டியின் படம் என நான்கு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவை அனைத்துமே ஹிந்தி திரைப்படங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக நடிப்பை தாண்டி தமன்னாவின் நடனம்தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறது. இந்த நிலையில், ஒரு பேட்டி ஒன்றில் நடிகை தமன்னா தனது பிரபலத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதில் “நான் தமிழ், தெலுங்கில் எல்லா வகையான கமர்ஷியல் படங்களிலும் நடித்தேன். ஆனால், கடினமான நடன அசைவுகளை என்னைத் தூண்டியது. அல்லு அர்ஜுன்தான். அவருடன் பத்ரிநாத் படத்தில் நடித்த பிறகு, நிறைய படங்களில் நடனமாட வாய்ப்புகள் கிடைத்தன. சிறப்பு பாடல்களால்தான் பிரபலமடைந்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.
