சென்னை நகரின் பரபரப்பான தெருக்களில், ஒரு அழகிய புன்னகையும், இனிய பேச்சும் கொண்ட சுகந்தி என்ற பெண் தன் வாழ்க்கையை ஒரு நாடகமாக மாற்றியிருந்தாள்.
அவள் வெறும் ஒரு பெண் அல்ல; அவள் ஒரு கும்பலின் மையப் புள்ளி. அவளுடன் இணைந்து செயல்பட்ட கங்கா என்ற மற்றொரு பெண்ணும், பல ஆண்கள் – குட்டி ஜெயராஜ், பவன் குமார், செந்தில், சிவா, பார்த்திபன், பவன் குமாரின் தம்பி, மரிமதாஸ் மற்றும் பெயர் தெரியாத சிலர் – அனைவரும் அவளது திட்டங்களுக்கு துணை நிற்கின்றனர்.
சுகந்தி தன் தாய், தம்பி ஆகியோருடன் சேர்ந்து, சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்தாள். அங்கு வேலைக்கு செல்லும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு, "வேலைக்கு வருவது போல்" நடித்து அணுகினாள்.
கங்காவுடன் இணைந்து நாடகம் ஆடி, பலருடன் நட்பு பாராட்டி, காதல் போல் தோற்றமளித்து பணம், நகை, சொத்துக்களை ஏமாற்றினாள். சில சமயங்களில் ஹோட்டல்களில் தனிமையை கொண்டாடி, மேலும் நம்பிக்கை வாங்கி பணத்தை சுருட்டினாள்.
இடையில், ஹோட்டல் உரிமையாளர் மகன் மகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஒருவரை தனது வலையில் வீழ்த்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து, மகேஷின் நம்பிகையைப் பெற அவருடன் உல்லாசமாக இருக்க ஹோட்டல் அறை ஒன்றை திட்டமிட்டு நடத்தினார்.
சென்ற இடத்தில், காதல் பேச்சுகள், கொஞ்சல்களை தொடர்ந்து வேலைகள் வேகமெடுத்தன. அடுத்தடுத்த கட்டத்தில் காதலி சுகந்தியின் வயிற்று பகுதியை பார்த்த மகேஷ் அதிர்ந்தார்.
ஆம், சுகந்தி ஏற்கனவே குழந்தை பெற்றவள் என்பதை காட்டும் தழும்புகள். மகேஷ் அவதானித்தார். நாம் ஏமாற்றப்படுகிறோமோ என்ற சந்தேகம். ஆனால், சுகந்தியிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் அன்றைய திட்டத்தை கைவிட்டு சாக்கு போக்கு சொல்லி அந்த அறையில் இருந்து தப்பித்து வீடு திரும்பினார். அடுத்தடுத்து அவர் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அவளது மகள் ஜெனிபர் (பெரியவள்), சிறுவன் ஆகாஷ், அம்மா பாத்திமா – இவர்களும் இந்த வட்டத்தில் இருந்தனர். மரிமதாஸ் என்ற நபருடன் நீலாங்கரை காவல் நிலையத்தில் திருமணம் நடைபெற்றது.
ஆனால் அதற்கு முன்பே சுகந்தி வேறொருவரை காதலித்து வந்ததை அறிந்த மரிமதாஸ் விலகினார். பின்னர் அவள் பல ஆண்களுடன் "காதல்" நாடகம் ஆடி, அவர்களின் வீடுகளில் புகுந்து திருடியதாகவும், விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இவர்கள் மீது பல பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. இவர்கள் தலைமறைவாக புகைப்படம் காட்டப்பட்டுள்ளது. வேறு குடும்பத்தை குறி வைத்து தங்களுடைய அடுத்த வேலையை தொடங்கலாம். எனவே, இவர்களை பார்த்தால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும்.
சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்:சில நிமிட சபலம், உங்கள் ஒட்டுமொத்த சேமிப்பு மற்றும் மன நிம்மதியை சூறையாடக்கூடியது நினைவில் கொள்ளுங்கள்.
இந்த நபர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்! உங்கள் பணம், நம்பிக்கை, குடும்பத்தை இழக்காதீர்கள்! குடும்பத்தை விட பெரியதும், முக்கியமானதும் எதுவும் இல்லை.
இது ஒரு எச்சரிக்கை மட்டுமல்ல – இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. குற்றவாளிகள் பெயர் எதுவும் மாற்றப்படவில்லை. உங்கள் அருகில் யாராவது இதுபோல் நடந்து கொண்டால், உடனே எச்சரிக்கை செய்யுங்கள்!
கடந்த 2020-ம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கொள்ளையடித்த படமும் வரும். கதாநாயகி போல நிஜத்தில் உலவி கொண்டிருக்கிறார் சுகந்தி. உஷார்!
