நள்ளிரவு இருள் சூழ்ந்திருந்த லண்டனின் அறையில், நாகேஷின் போன் திடீரென ஒலித்தது. கடிகாரம் நள்ளிரவு 2 மணியைத் தாண்டியிருந்தது. அழைப்பு தந்தை பிரசாத்திடமிருந்து வந்தது.
"ஹலோ... அப்பா?" நாகேஷ் தூக்கக் கலக்கத்தில் கேட்டான்.
"நாகேஷ்... உங்க அம்மா... ரேணுகாதேவி... ஹார்ட் அட்டாக் வந்து... நம்மள விட்டு போய்ட்டாங்கப்பா. உடனே கிளம்பி வா..." பிரசாத்தின் குரல் நடுங்கியது போலத் தோன்றியது, ஆனால் ஏதோ ஒரு விசித்திரமான அமைதி அதில் படிந்திருந்தது.
அதே நேரத்தில், ஹைதராபாத்தில் மகள் தேஜஸ்ரீக்கும் அதே செய்தி சென்றது. இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் இருவரும் வீட்டுக்கு பறந்தனர்.
போரங்கி என்ற சிறிய நகரத்தில், ரேணுகாதேவியின் உடல் கிடந்தது. முகத்தில் இன்னும் புன்னகை படர்ந்திருந்தது போலத் தோன்றியது. கண்ணீரோடு குழந்தைகள் அழுதனர். ஊர்மக்கள், உறவினர்கள் அனைவரும் வந்து ஆறுதல். இறுதிச் சடங்குகள் முடிந்தன. உடல் தகனம் செய்யப்பட்டது.
ரேணுகா தேவி - உயிரிழந்தவர்
பிரசாத் தன் மனைவியின் மறைவுக்கு பிறகும் விசித்திரமாக இருந்தார். சோகம் தெரியவில்லை. சிரித்துப் பேசினார். உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு, எதையோ சாதித்தது போல மகிழ்ச்சியாக நடந்து கொண்டார். அப்படியே சோகமாக இருந்தாலும், அது செயற்கையான சோகம் என தெளிவாக தோன்றியது. அடுத்த, சில நாட்களில் ரேணுகாதேவி பெயரில் இருந்த வீட்டை தன் பெயருக்கு மாற்றினார்.
அதற்காக மகன், மகள் இருவரிடமும் கையெழுத்து வாங்கினார். "அப்பா, அம்மா இறந்து 10 நாள் கூட ஆகல.. இப்பவே இதெல்லாம் எதுக்கு?" என்று மகன் நாகேஷ் கேட்டபோது, இதெல்லாம் சொத்து சமாச்சாரம், உடனே பண்ணிடனும் என பிரசாத் மழுப்பலாக பதில் சொன்னார்.
நாட்கள் செல்லச் செல்லச் சந்தேகம் வளர்ந்தது. "அம்மா இறந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகல... ஏன் என்னை லண்டனுக்கு அனுப்புறீங்க?" என்று நாகேஷ் கேட்டான். பிரசாத் ஏதேதோ தவறான காரணங்கள்.
ஒரு நாள், பிரசாத் வீட்டில் இல்லாத நேரம். நாகேஷ் அவரது செல்போனை எடுத்துப் பார்த்தான். உள்ளே இருந்தது ஒரு உலகமே தலைகீழாக மாறும் உண்மை.
ஜான்சிராணி என்ற பெண்ணுடன் ஆபாசமான மெசேஜ்கள். அதைவிட கொடுமையானவை... ரேணுகாதேவியைக் கொலை செய்யும் திட்டங்கள். நான் உன் கூட இப்போவே உல்லாசமா இருக்கணும் என பிரசாத் கேட்க, பின்னாடி மெதுவா பண்ணு மாமா, நான் உனக்கு தான்.. முதல்ல ரேணுகாவை தீர்த்து கட்டுங்க.." என்று ஜான்சி ராணி பதிலளிக்கும் தேதிகள். திட்டங்கள். மயக்க மருந்து. தலையணை என அத்தனை அசிங்கமும் வாட்சப்பில் குவிந்து கிடந்தது.
நாகேஷ் அதிர்ந்து போனான். கண்ணீர் வழிய, போலீஸ் நிலையத்துக்கு ஓடினான்.
விசாரணை தொடங்கியது. பிரசாத்தை கஸ்டடியில் எடுத்தனர். கிடுக்குப்பிடி விசாரணை.
மெல்ல மெல்ல உண்மை வெளிவந்தது.
ரேணுகாதேவிக்கு அழகு சாதனப் பொருட்கள் செய்யும் ஜான்சிராணி அடிக்கடி வீட்டுக்கு வருவாள். பிரசாத்துடன் அவளுக்கு தகாத உறவு. ரேணுகாதேவிக்கு தெரிந்தது. சண்டைகள். கண்டிப்புகள். “கல்யாணம் முடிக்கிற வயசுல இப்படி பண்றீங்களா? பசங்களோட எதிர்காலத்தை வீணாக்குறீங்க!" என்று கத்தியிருக்கிறாள்.
ஆனால் பிரசாத்துக்கு அது தடையாக இருந்தது. ஜான்சிராணியும் சேர்ந்து கொண்டாள். ரேணுகாதேவியை தடையாகக் கருதினர்.
2025 மே 18ஆம் தேதி இரவு...
பிரசாத் பாசமாக நடந்து கொண்டார். "ரேணு, ஜூஸ் குடிச்சுக்கோ..." என்று கொடுத்தார். அதில் மயக்க மருந்து கலந்திருந்தது.
ரேணுகாதேவி மயங்கினாள். பிறகு தலையணையை எடுத்து முகத்தில் அழுத்தினார். மூச்சுத்திணறல். போராட்டம். இறுதியில்... உயிர் பிரிந்தது.
அதை ஹார்ட் அட்டாக் என்று நாடகமாடினார். குழந்தைகளை ஏமாற்றினார். எல்லாரையும் ஏமாற்றினார்.
ஆனால் ஒன்பது மாதங்கள் கழித்து, மகனின் சந்தேகம், செல்போன்... எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தது.
பிரசாத்தும் ஜான்சிராணியும் கைது செய்யப்பட்டனர். சிறைக்குள் அடைக்கப்பட்டனர்.
ஒரு தந்தை தன் மனைவியை கொன்றான்... காதலுக்காக.ஒரு குடும்பம் உடைந்தது... உண்மை தெரிந்த பிறகு.
இருளில் மறைந்திருந்த கொடூர உண்மை, ஒரு செல்போன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஆனால் ரேணுகாதேவி திரும்பி வர மாட்டாள். என்றும் வரமாட்டாள்.
