நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார். ரஜினிகாந்துடன் கூலி படத்தில் 'மோனிகா' பாடலுக்கு நடனமாடியதும், பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்ததும், சூர்யாவுடன் ரெட்ரோ படத்தில் நடித்ததும் அவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக மாறியுள்ளது.
தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் டிஜே: துவ்வாடா ஜெகந்நாதம் மற்றும் ஆலா வைகுண்டபுரமுலோ படங்களிலும், பிரபாஸுடன் ராதே ஷ்யாம் படத்திலும் நடித்துள்ளார். இந்தியில் சல்மான் கான், ஹ்ரிதிக் ரோஷன் போன்றோருடன் ஒரே ஒரு படத்தில் தான் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பூஜா ஹெக்டே பேசியதாக கூறப்படும் பரபரப்பு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், ஒரு பான் இந்தியா படப்பிடிப்பின்போது, தனது கேரவனுக்குள் அனுமதியின்றி நுழைந்த ஒரு நட்சத்திர நாயகன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி தொட முயன்றதாகவும், உடனே அவரை கையால் ஓங்கி அறைந்து வெளியேற்றுவதாகவும், அதன் பிறகு அவருடன் தொடர்ந்து நடிக்காமல் படத்தை விட்டுவிடவும் வெளியேறினேன் எனவும் கூறியுள்ளார்.
கிட்டதட்ட 80% படப்பிடிப்பு முடிந்த நிலையில், எஞ்சியிருந்த காட்சிகளை டூப் போட்டு எடுத்து அந்த படத்தை வெளியிட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வைரல் செய்தியால், "பூஜா ஹெக்டே அறைந்த ஸ்டார் யார்?" என்ற கேள்வி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. சிலர் பிரபாஸ்ஐ (ராதே ஷ்யாம் படத்தில் இணைந்து நடித்ததால்) குறிப்பிடுகின்றனர். மற்றவர்கள் வேறு நாயகர்களை இழுக்கிறார்கள்.
ஆனால், இந்த நேர்காணல் முற்றிலும் போலியானது என்று திரைத்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பூஜா ஹெக்டே அல்லது அவரது டீம் எந்த அத்தகைய பேட்டியும் கொடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் வதந்தி மட்டுமே!
தற்போது ஜனநாயகன் (விஜய்) படத்தில் நாயகியாக நடித்து முடித்துள்ள பூஜா ஹெக்டே, தனது கேரியரில் பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இத்தகைய வதந்திகள் அவரது புகழை பாதிக்காது என நம்பலாம்.
