அந்த காட்சியில் நடிக்க வற்புறுத்திய இயக்குநர்.. அதுவும் மகேஷ் பாபு படத்தில்.. நடிகை ராசி ஓபன் டாக்..!

90ம் ஆண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராசி. குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி, பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.
இந்த நிலையில், மகேஷ் பாபு நடிப்பில் உருவான நிஜம் படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார் நடிகை ராசி. இவர் அப்படிப்பட்ட வில்லனின் மனைவியாக நடித்திருந்தார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ராசி பேசினார். இதில் அவர் கூறியதாவது, "நான் நிஜம் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற முதல் நாளே, எனக்கு விருப்பம் இல்லாத காட்சியில் நடிக்க இயக்குநர் தேஜா சொன்னார். அந்த காட்சி உண்டு என அவர் என்னிடம் அதற்கு முன் சொல்லவில்லை. படத்தில் நடித்தால் என் வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும் என உணர்ந்தேன்.
ஆனால், இயக்குநர் என்னை நடிக்க வேண்டும் என கூறினார். அதனால் நான் விருப்பம் இல்லாமல் நடித்தேன். டப்பிங்கின்போது இயக்குநர் தேஜா எனக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டார். இருப்பினும், நான் அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். நான் எந்த இயக்குநரை மறக்க விரும்புகிறேன் என்று கேட்டால்? தேஜாவின் பெயரைத்தான் சொல்வேன்" என கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post