திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் கணிதடீச்சர்17 வயது 11-ம் வகுப்பு மாணவருக்கு தனது அந்தரங்க உறுப்பின் படம் இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாணவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தினர் டீச்சரை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.
30 வயது ஆதீஸ் என்று அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் கற்பித்து வருபவர் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்ததாகக் கூறப்படுகிறது. மாணவரின் தந்தை, தனது மகனின் மொபைல் போனில் எதேர்ச்சையாக புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்த போது ட்விஸ்ட்..
புகைப்படங்களுக்கு நடுவே டீச்சர் அனுப்பிய இந்தப் படத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், உடனடியாக மகனிடம் விசாரிக்க, என்னோட கணக்கு டீச்சர் தான் இன்ஸ்டாகிராம்ல அனுப்புனாங்க கூறிய உடனேயே திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறினார்.
போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் 11-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், 18 வயதுக்கு கீழ் குழந்தைகளுக்கு எதிரான உணர்ச்சி ரீதியான அல்லது உடல் ரீதியான சாதனைகளுக்கு எதிரான கடுமையான தண்டனைகள் விதிக்கிறது.
கைது செய்யப்பட்ட ஆதீஸ் தற்போது காவலில் உள்ளதாகவும், விரிவான விசாரணை நடைபெறுவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி நிர்வாகம் இதுகுறித்து எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை, ஆனால் உள்ளூர் கல்வியாளர்கள் இது போன்ற சம்பவங்கள் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் நடத்தைக்கு கடுமையான கண்காணிப்பு தேவை என வலியுறுத்தியுள்ளனர்.
"இது போன்ற சம்பவங்கள் குழந்தைகளின் உள்மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். பெற்றோரும் பள்ளிகளும் இணைந்து செயல்பட வேண்டும்" என ஒரு உள்ளூர் கல்வியாளர் கூறினார்.
போலீஸ் விசாரணையில் மேலும் விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, சமூக விழிப்புணர்வு மற்றும் சட்ட அமலாக்கம் இன்றியமையாதது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
