உஷார்..! 10 நிமிடத்திற்கு மேல் கழிப்பறை பயன்படுத்துறீங்களா..? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்… எச்சரிக்கும்

பொதுவாக நமது உடல் ஆரோக்கியத்தில் குடல் ஆரோக்கியமானது முக்கிய பங்கு வகிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவு முதல் மனநோய் வரை அனைத்துடனும் சம்பந்தப்பட்டது. எய்ம்ஸ் ஹார்வர்ட் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பல்கலைக்கழக பயிற்சி பெற்ற இரப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் குடல் அமைப்பை சிறப்பாக செயல்படவும் நடைமுறை குறிப்புகளை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம். கழிப்பறையில் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்று அறிவுறுத்தும் அவர் 10 நிமிடத்திற்கு மேல் கழிப்பறையில் அமர்ந்திருந்தால் மூலநோய் அபாயம் அதிகரிக்கும் என்றும், அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் 20 பெரியவர்களுக்கு ஒரு நபருக்கு மூலநோய் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளார். பொதுவாக நார்ச்சத்து போதுமானதாக இல்லாத பட்சத்தில் இந்த நிலை ஏற்படுகிறது. ஆரோக்கியமான குடல் பழக்கம் வாரத்திற்கு மூன்று முறை முதல் ஒரு நாளைக்கு மூன்று முறை வரை மலம் கழிப்பதாக இருக்கலாம். அது சாதாரணமானது தான். பதப்படுத்தப்பட்ட உணவுகள் சர்க்கரை, அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தோடு தொடர்புடையவை. அதை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடிப்பது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு சுமார் 15 கிராம் நார்ச்சத்து நிறைந்த உணவை அமெரிக்காவில் உட்கொள்கிறார்கள். வெறும் 1 முதல் 2 டீஸ்பூன் சியா ,ஆளி விதைகளை சாப்பிட்டு வர நார்ச்சத்து மற்றும் பிரீபையடிகளுக்கு வழங்கப்படுகிறது. அவை ஆரோக்கியமான உடல் பாக்டீரியாவை ஆதரிக்கிறது. வீக்கத்தை குறைக்கிறது, செரிமானத்தை சீராக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post