பாலிவுட் சினிமாவின் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியதன் மூலம், சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் நடிகை முமைத் கான்.
ஈட்டம் பாடல்கள் மூலம் பிரபலமான இவர், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆகிய தென்னிந்திய மொழி படங்களில் ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தது. தன்வசப்படுத்தினார்.
இவர்,கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில், "நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே" பாடலுக்கு நடனமாடி இருந்தார். அந்த பாடல் பட்டி எங்கும் பிரபலமானது.
அதைத்தொடர்ந்து, விஜய்யின் போக்கிரி படத்தில், என் செல்லப்பேரு ஆப்பிள் பாடலுக்கும், விக்ரமின் கந்தசாமி படத்தில் "என் பேரு மீனாகுமாரி" என பல படங்களில் நடித்துள்ளார். ஆடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
பிரசாந்த் மம்முட்டியான் திரைப்படத்திலும், மறந்தேன் மன்னித்தேன், மருதமலை, வில்லு உள்ளிட்ட படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்தார். நடிகை முமைத் கானுக்கு கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது.
தற்போது முமைகத்கான் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில். கடந்த காலத்தில் நான் ஒரே நேரத்தில் நான்கு பேருடன் டேட்டிங் சென்று இருக்கிறேன். எனக்கு சமீபத்தில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது.அந்த விபத்தில் இருந்து குணமடைந்துவிட்டேன்.
அதன் பிறகு டேட்டிங் சென்றவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை. அவர்களை விட்டு விரிந்து விட்டேன். இப்போது நான், தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறேன். எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்வது பற்றி எந்த ஒரு எண்ணமும் இல்லை என்று அந்த பேட்டியில் நடிகை முமைத் கான் கூறியுள்ளார்.
