வெள்ளை முடியைப் பிடுங்கினால், அதிக நரைமுடி வளருமா? உண்மை இதோ!

வயதானவர்களுக்கு ஏற்படும் வெள்ளை முடியோ அல்லது இளைஞர்களுக்கு ஏற்படும் இளநரையோ? அந்த முடியைப் பிடுங்கினால், வெள்ளை முடிகள் அதிகம் வளரத் தொடங்கும் என்று உங்களிடம் யாராவது கூறியிருக்கிறார்களா? அது உண்மையா?
அப்போதெல்லாம் வெள்ளை முடி என்பது முதுமையின் அடையாளமாக விளங்கியது. ஆனால், இப்போது இளைஞர்களுக்கு கூட வெள்ளை முடி வருகிறது. அது அசிங்கமாக இருக்கிறதே என்று நாம் அந்த முடியைப் பிடுங்கப்போகும் சமயத்தில், 'அதை பிடுங்காதே, பிடுங்கினால், தலை முழுவதும் பரவி, வெள்ளை முடிகள் தோன்றிவிடும்' என்று கூறுவார்கள். உடனே நாமும் பயந்து பயந்து அந்த முடியை கூடுதல் சிறப்புடன் கவனிப்போம். இதில் வேடிக்கை என்னவென்றால், நமது நண்பர்கள் அதைப் பிடுங்கி நம்மை பழித் தீர்க்கவும் திட்டமிடுவார்கள். இளநரை ஏற்படுவதற்கான முதன்மை காரணங்கள், இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகும். இது தவிர அதிக டென்ஷன் மற்றும் மோசமான நீர் போன்றவற்றால் வெள்ளை முடி வர ஆரம்பித்து விடுகிறது.
வெள்ளை முடியை பிடுங்கினால் தவறு என்றும் சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் இதை கட்டுக்கதை என்றும் கூறுகிறார்கள். வெள்ளை முடியைப் பிடுங்குவதால், முடிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறையுமே தவிர, மற்ற கருப்பு முடிகளை வெள்ளையாக்காது. அதனால் ஒரு வெள்ளை முடி, இன்னொரு கருப்பு முடியில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. பொதுவாக நரைமுடி வருவதற்கான மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது. இந்த வெள்ளை முடி பிரச்சனையைத் தவிர்க்க, இளைஞர்கள் சில தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். குறிப்பாக வெள்ளை முடிக்கு வண்ணம் பூசுவது, அவற்றை பிடுங்குவது போன்றவற்றை செய்கிறார்கள். ஆனால் அதற்கு பதிலாக, வெள்ளை முடி ஆரம்பிக்கும் போது, ​​காஃபின் உள்ள பொருட்களை உட்கொள்வதை குறைக்கவும். இது தவிர ஃபோலிக் அமிலம் நிறைந்த பொருட்களை சாப்பிடுங்கள். கிரீன் டீயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளை முடியை தடுக்க மருதாணியை பயன்படுத்தவும். இது உங்கள் தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும். தொடர்ந்து தடவினால், முடி பளபளப்பாகும். எனவே, இப்போதாவது தெரிந்துகொள்ளுங்கள் 90ஸ் கிட்ஸ், ஒரு நரை முடியைப் பிடுங்கினால் மற்ற முடிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

Post a Comment

Previous Post Next Post