வீக் எண்டில் சுவாரசியமாய் நேரம் கழிக்க விரும்புகிறவர்களுக்கு, இந்த 5 ரொமான்டிக்–திரில்லர் படங்கள் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்!
வீக் எண்ட் வந்துவிட்டாலே ஓய்வாக ஒரு நல்ல திரைப்படம் பார்க்க வேண்டும் என்பதே பலரின் ஆசை. குறிப்பாக செக்சியும் ரொமான்ஸும் கலந்த படங்கள் தனியாகவோ அல்லது துணையுடன் சேர்ந்து ரசிக்க நினைப்பவர்களுக்கு, தற்போது ஓடிடி தளங்களில் பல தரமான திரைப்படங்கள் கிடைக்கின்றன. இந்நிலையில், பார்வையாளர்களிடையே அதிகம் பேசப்படும் 5 சிறந்த ரொமான்டிக்–திரில்லர் படங்களை இங்கே தொகுத்துள்ளோம்.
1. பி.ஏ. பாஸ் (2012) – கிரைம் - திரில்லர் - ரொமான்ஸ்
இளைஞனும், அவனை விட வயதில் மூத்த பெண்மணியும் இடையே உருவாகும் ரொமான்ஸ் மற்றும் அதன் பின்னணியில் நடக்கும் திகில் சம்பவங்களே இப்படியின் மையக் கரு. உணர்ச்சியும், திரில்லருமான காட்சிகளும் தனித்துவமாக பேசப்பட்ட படம்.
எங்கே பார்க்கலாம்? ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம்
2. ஜிஸ்ம் (2003) – ரொமான்டிக் திரில்லர்
ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம், பணக்கார பெண்ணை காதலிக்கும் வேலையில்லா பட்டதாரி இளைஞனின் காதல், ஆசை மற்றும் அதனால் ஏற்படும் சிக்கல்களை திகில் கலந்த ரொமான்ஸ் வடிவில் வெளிப்படுத்துகிறது.
எங்கே பார்க்கலாம்? ஜீ 5
3. போர்ட்ரைட் ஆப் எ லேடி ஆன் பயர் (2019) – பிரெஞ்சு ரொமான்டிக் டிராமா
உணர்ச்சிகளையும் ரொமான்ஸையும் மென்மையாக உருவாக்கிய பிரெஞ்சு திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று. கலை, காதல், மனநிலை ஆகியவற்றை ஆழமாக பதிவு செய்த படம் உலகளவில் பெரும் பாராட்டைப் பெற்றது.
விளம்பரங்கள்
எங்கே பார்க்கலாம்? அமேசான் பிரைம்
4. பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே (2015) – சைக்கோலோஜிக்கல் ரொமான்டிக் திரில்லர்
உலகம் முழுவதும் பேசப்பட்ட மனநிலை சார்ந்த ரொமான்ஸ், த்ரில், அதிர்வு ஆகியவற்றைக் கலந்த கதை. கதாபாத்திரங்களின் மனஉணர்வுகளையும் உறவின் சிக்கல்களையும் மையமாகக் கொண்ட படம் இன்றும் ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் ரொமான்டிக் படங்கள் ஒன்று.
எங்கே பார்க்கலாம்? ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ 5
5. பேசிக் இன்ஸ்டிங்க்ட் (1992) – கிளாசிக் ரொமான்டிக் திரில்லர்
சஸ்பென்ஸ் மற்றும் செக்ஸியான ரொமான்ஸை அழகாக கலந்து எடுத்தார் உலக புகழ் பெற்ற படம். ஷெரோன் ஸ்டோன் நடிப்பில் வெளியான இந்த திரில்லர், இன்று வரை ரசிகர்கள் மத்தியில் கால்ட் கிளாசிக்காக மதிக்கப்படுகிறது.
எங்கே பார்க்கலாம்? அமேசான் பிரைம்
வீக் எண்டில் சுவாரசியமாய் நேரம் கழிக்க விரும்புகிறவர்களுக்கு, இந்த 5 ரொமான்டிக்–திரில்லர் படங்கள் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரு!
