ஆபத்தில் முடிந்த இளைஞர்களுடனான நட்பு.. நம்பி வந்த பேராசிரியைக்கு நடந்த கொடூ*ம்! மருத்துவ பரிசோதனையில் வெளியான குலைநடுங்க வைக்கும் தகவல்..!

ஆபத்தில் முடிந்த இளைஞர்களுடனான நட்பு.. நம்பி வந்த பேராசிரியைக்கு நடந்த கொடூ*ம்! மருத்துவ பரிசோதனையில் வெளியான குலைநடுங்க வைக்கும் தகவல்..!
மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் பிரோஸ் (பெயர் மாற்றப்பட்டது) மற்றும் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது மார்டின் ஆண்டனி இவர்களுக்கும் இடையே, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின் மூலம் கல்லூரி பேராசிரியை ஒருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியின்போது அவரது தொலைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்ட இரு இளைஞர்களும், அடிக்கடி தொலைபேசியில் பேசி நட்பை வளர்த்துக்கொண்டனர். இளைஞர்கள் நல்ல முறையில் பேசி வந்ததால், பேராசிரியரையும் அவர்களுடன் நெருக்கமாகப் பழகினார். இந்நிலையில், தனது உறவினரின் நிகழ்ச்சி நடைபெறுவதாகக் கூறி, பிரோஸ் மற்றும் மார்டின் ஆண்டனி ஆகியோர், அக்டோபர் 13ஆம் தேதி பேராசிரியரை கொச்சிக்கு அழைத்தனர். அங்கு உயர்தர போதைப்பொருள் மற்றும் கஞ்சா போன்றவற்றை அவருக்கு வழங்கினர். 'வேண்டாம்' என்று மறுத்தபோதும், வலுக்கட்டாயமாகக் கொடுத்ததாகப் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் பேராசிரியை மயக்கத்தில் மூழ்கினார். அதைப் பயன்படுத்தி, குற்றவாளிகள் அவரை களமச்சேரி மற்றும் நெடும்பாச்சேரி பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரத்தைச் செய்ததாகக் கூறினார்.
இந்தக் கொடூர சம்பவத்திலிருந்து தப்பி வந்த பேராசிரியை, கதறியபடி களமச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். மருத்துவப் பரிசோதனையில், போதைப்பொருள் கொடுத்து பிரோஸ் மற்றும் மார்டின் ஆண்டனி ஆகியோர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. பாதிக்கப்பட்ட பேராசிரியையை மருத்துவப் பரிசோதனைக்காக களமச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குற்றவாளிகள் தொடர்ந்து தேடப்படுகின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம், "கூடா நட்பு கேடாக முடியும்" என்ற பழமொழி நினைவூட்டுகிறது. அறிமுகமில்லாத நபர்களுடன் நெருக்கமாகப் பழகுவது ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கு இது ஒரு கொடூரமாக அமைந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post