ஆண்ட்டியால் "காலி" ஆன நடிகர் கரண்? அந்த ஆண்ட்டி யார்னு தெரியுமா? பிரபலம் ஒப்பன் டாக்..!

பிரபல நடிகர் கரண் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாகவும், சில படங்களில் ஹீரோவாகவும் கலக்கியவர். ஆனால், சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருவது கவலை அளிக்கிறது.
இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், கரணின் மார்க்கெட் சரிவுக்கு என்ன காரணம் என்று மனம் திறந்து பேசினார். சபிதா ஜோசப் ரியலோன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "கரண், அதாவது ரகு தமிழகத்தைச் சேர்ந்தவர். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 'நம்மவர்' படத்தில் வில்லனாக நடித்தபோது, ​​அவருடைய நடிப்பு வித்தியாசமாக இருந்தது. அதன் பிறகு 'கண்ணெதிரே தோன்றினாள்', 'லவ் டுடே' போன்றவை படங்களில் ஹீரோவாக நடித்தார். விஜய், அஜித், பிரசாந்த் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நட்பாக பழகக்கூடிய கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருக்கிறார். ஹீரோவாக சில படங்களில் நடித்ததுடன், சொந்தமாக சில படங்களை தயாரிக்கவும் ஆரம்பித்தார்." அப்போது லட்சுமி என்ற பெண் கரணிடம் மேனேஜராக பணியாற்றி வருகிறார். அவரை அனைவரும் ஆண்ட்டி என்று அழைப்பார்கள். கரணின் கால்ஷீட், சம்பளம் மற்றும் பட கம்பெனி விஷயங்கள் அனைத்தையும் லட்சுமியே கவனித்து வந்துள்ளார். கரணுக்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க நல்ல வாய்ப்புகள் இருந்தும், அவர் ஹீரோவாக நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினார். அதனால்தான் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. வில்லன் வாய்ப்புகள் அவருக்கு அதிகமாகவே வந்துகொண்டிருந்தது. லட்சுமிக்கும் கருணைக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. ஒருமுறை லட்சுமி என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று எனக்கு பேஜர் மூலம் தகவல் அனுப்பியிருந்தார். அதற்குள் மௌனம் ரவி என்னை சந்தித்து, "லட்சுமி தற்கொலைக்கு முயற்சிப் போறாங்க போல, உன்னை தேடிக்கிட்டு இருந்தாங்க" என்று சொன்னார். உடனே நான் லட்சுமியை பார்க்க சென்றேன். அப்போது அவர் என்னிடம், "கரண் சார் முன்பு போல என்கிட்ட பேசுவதில்லை. அவரிடம் யாரோ சந்தேகத்தை கிளப்பி விட்டிருக்காங்க.
இல்லன்னா அவங்க வீட்ல யாராவது ஏதாவது சொன்னாங்களான்னு தெரியல. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. தற்கொலை பண்ணிக்கலாம் போல இருக்கு" என்று கூறினார். அதற்கு நான் லட்சுமியிடம், "பல பேர் பல விதமா பேசினாலும், உங்க தொழில் இதுதான். ஒரு நடிகருக்கு, மேனேஜராக ஒரு பெண் இருக்கும்போது இப்படியான பேச்சுக்கள் வரத்தான் செய்யும். வெளியில இருந்து பார்க்கும்போது, ​​உங்களில் ஒருவர் கஸ்டடியில் இன்னொருத்தர் இருக்கிற மாதிரிதான் தோணும். நீங்க மேனேஜரா உங்க வேலையை வழக்கம்போல செய்யுங்க" என்று தைரியம் சொன்னேன். மௌனம் ரவியும் அவருக்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகு லட்சுமி எங்களுக்கு நன்றி சொல்லிட்டு போனாங்க. மற்றபடி லட்சுமியால கரண் பட வாய்ப்புகளை இழந்தார்னு சொல்ல முடியாது. லட்சுமி பார்க்கிறதுக்கு அழகா இருப்பாங்க. பொதுவா மேனேஜர்கள்னா, அவங்க வேலை பார்க்குற நடிகரோட கார்ல, ஆபீஸ்லனு ஒண்ணாவே டிராவல் பண்ண வேண்டியிருக்கும். அப்படிதான் லட்சுமிக்கும் நடந்திருக்கலாம். இவங்க ரெண்டு பேரும் எப்பவுமே ஒண்ணா டிராவல் பண்றது குறித்து கரண் வீட்ல யாராவது ஏதாவது சொல்லியிருக்கலாம். இல்லன்னா நண்பர்கள் மத்தியில யாராவது ஏதாவது சொல்லியிருக்கலாம். அதனால்கூட கரண் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம். ஆனா, சினிமா தெரிஞ்சவங்க லட்சுமி. நிறைய தயாரிப்பாளர்களை தெரிஞ்சவங்க. இது ஒரு நடிகரா கரணுக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. எனினும் சுற்றியிருக்கிறவங்கதான் கரண் மனசை மாத்தியிருக்காங்க" என்று சபிதா ஜோசப் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சபிதா ஜோசப்பின் இந்த கருத்துக்கள் நடிகர் கரணின் திரைப்பயணம் குறித்து புதிய கோணத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற அவரது பிடிவாதமே அவருக்கு படமாக இருந்தது வாய்ப்புகளை குறைத்திருக்கலாம் என்ற கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் விவாத பொருளாகியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post