வீட்டில் அதிகமாக சமைக்கும் போது, கேஸ் அடுப்பில் உள்ள பர்னர்களில் எண்ணெய் படரும் பிசுபிசுப்பு ஒரு பெரிய தொல்லையாக மாறுவது சாதாரணம். எவ்வளவு தேய்த்தாலும் அகலாத இந்த மாசு, அடுப்பு சுத்தம் செய்வதை கடினமான பணியாக மாற்றிவிடும். இந்நிலையில், சமையல் நிபுணர்கள் பரிந்துரைக்கும் மிக எளிய வீட்டுச் செய்முறை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எளிய மூன்று பொருட்களால் மாசு மறையும் ‘மாஜிக் கலவை’
கேஸ் பர்னரில் படிந்த எண்ணெய் மற்றும் கொழுப்பு அடர்த்தியை முழுமையாக அகற்ற, வீட்டிலேயே கிடைக்கும் மூன்று பொருட்களே போதுமாம் — ஷாம்பு, ஈனோ மற்றும் தண்ணீர்.
சமையல் நிபுணர்கள் கூறுவது பின்வருமாறு:
படி 1: ஒரு பாத்திரத்தில் சிறிதளவு ஷாம்பு ஊற்றவும்.
படி 2: அதனுடன் ஒரு ஈனோ பாக்கெட்டை சேர்க்கவும். ஈனோ சேரும் போது கலவை மெதுவாக நுரை வரும்.
படி 3: இவற்றில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து ஒரு சுத்தம் செய்யும் லிக்விட் தயாரிக்கவும்.
இந்த கலவையில்தான் முக்கியம் இருக்கிறது.
படி 4: இப்போது கேஸ் பர்னர்களை இந்த நுரை கலவைக்குள் முழுமையாக ஊறவைக்கவும். சுமார் 20–30 நிமிடங்கள் ஊற வைத்து விடலாம்.
படி 5: பின்னர் ஒரு ஸ்க்ரப் அல்லது பழைய பற்கள் துலக்கும் பிரஷ் எடுத்துப் பர்னர்களை மெதுவாக தேய்த்து கழுவினால், படிந்திருந்த கடினமான எண்ணெய் மாசு எளிதாக நீங்கி விடும்.
இந்த முறையின் நன்மைகள்
அதிக விலையுள்ள கெமிக்கல் கிளீனர்கள் தேவையில்லை
எண்ணெய் பிசுபிசுப்பு விரைவாக கரைந்து விடும்
பர்னர் கருப்பாகாமல், பளபளப்புடன் இருக்கும்
அடுப்பின் ஆயுள் கூட அதிகரிக்கும்
சமையல் செய்பவர்கள் பெருமளவில் பாராட்டும் இந்த சுத்தம் செய்யும் டிப், வீட்டின் கேஸ் அடுப்பை புதிது போல மாற்றும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
