50 செகண்டுக்கு 5 கோடி..! அதிர வைக்கும் நயன்தாராவின் ஃபீஸ்..!

தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ஒரு 50 விநாடி ஓடக்கூடிய விளம்பரத்தில் நடிக்க 5 கோடி சம்பளம் வாங்கி அதிர வைத்திருக்கிறார்.

Nayanthara HD



 கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். இவர் ஐயா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அவர் அறிமுகமாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. அன்று முதல் இன்று வரை கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார் நயன்தாரா. 


இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இதன்மூலம் பான் இந்தியா அளவில் ஜொலித்து வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில், அவர் வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.



நயன்தாரா சம்பளம் 

 நடிகை நயன்தாரா சினிமாவில் நடிக்க ஒருவர் படத்துக்கு 10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். இவர் சினிமா மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து, அதன் வாயிலாக கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார். 

அந்த வகையில் அவர் விளம்பரத்தில் நடிக்க வாங்கும் சம்பளம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக 50 விநாடிகள் மட்டுமே ஒளிபரப்பாகக் கூடிய விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காக அவர் ரூ.5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். டாடா ஸ்கை விளம்பரத்தில் நடிக்கவே அவர் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post