யாரு இங்க.. இப்ப சோசியல் மீடியா பக்கமெல்லாம் இவங்க தான் வராங்க! ட்ரென்ட்டிங் இவங்கதான்; கொண்டாடும் நெட்டிசன்கள்!
தனது 15 வயதில் வெள்ளித் திரையில் அறிமுகமான இந்த நடிகை மராத்தி பொதுபோக்கு துறையில் ஒரு முக்கிய நபராக இவர் இருந்து வருகிறார்.
இவர் இந்தியில் வெளியான பிரபலமான திரைப்படங்களில் குறிப்பிட்ட வேடத்தில் நடித்துள்ளார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை கிரிஜா ஓக் தான். இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான அமீர் கானின் ‘தாரே ஜமீன் பர்’ திரைப்படத்தில் ஜபீன் (ஜபீன்) என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ’ஜவான்’ இஷ்க்ரா என்ற குழு படத்தில் உறுப்பினராக நடித்தார். 'கோஷ்டா சோட்டி டோங்கரேவாடி', 'குல்மோஹர்', 'மனிணி' மற்றும் 'அட்குலே மட்குலே' போன்ற பல மராத்திப் படங்களில் நடித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த நடிகை கிரிஜா ஓக் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறார். கடந்த சில நாட்களாக ட்ரெண்டிங்கில் இருக்கும் இவரை புது நேஷ்னல் க்ரஷ் என நெட்டிசன்கள் கொண்டாடுகின்றனர்.
கிரிஜா
கிரிஜா ஓக், சமூக வலைதளத்தில் ட்ரெண்டாவதற்கு காரணமே அவர் நடித்த வெப் தொடர் தான். அதாவது, ‘காந்தாரா’ படத்தில் இளவரசனாக நடித்த நடிகர் குல்ஷன் தேவய்யாவுடன் இணைந்து நடிகை கிரிஜா ஓக் ‘’தெரபி ஷெரபி’ வெப் தொடரில் நடித்துள்ளார். இந்தத் தொடரில் கிரிஜா ஓக், குல்ஷன் தேவையாவுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தது குறித்து சமீபத்தில் நேர்காணலில் பேசியிருந்தார்.
அதாவது, குல்ஷன் தேவய்யாவுடனான நெருக்கமான காட்சிகளைப் படமாக்கும்போது அவர் காட்டிய தொழில்முறை மனப்பான்மை மற்றும் உணர்வுபூர்வமான கவனிப்பு கிரிஜா ஓக் வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார். இதுதான் இவரை நேஷ்னல் க்ராஷ் என ரசிகர்கள் கொண்டாட காரணமாக அமைந்துள்ளது. கிரிஜா ஓக் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.






