டெல்லியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கடை வடிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
டெல்லி நகரின் அலுவலகங்கள் நிறைந்த பரிதாபாத் பகுதியில், ஒரு சாதாரண ஐ.டி. ஊழியன் வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் பெயர் ராகுல். வயது இருபத்தைந்து. நாள் முழுவதும் கம்ப்யூட்டர் சேம்பிள்களுக்கிடையே சிக்கிக் கொண்டு, இரவுகளில் சமூக வலைதளங்களில் அலைந்து திரிவான்.
இன்ஸ்டாகிராமில், அவன் போஸ்ட் செய்யும் சில படங்களுக்கு லைக்ஸ் வருவது மட்டுமல்ல, சில பெண்கள் அவனுக்கு மெசேஜ் அனுப்புவதும் வழக்கம். அவற்றில் ஒன்று, அவனை மாற்றியது.அந்த மெசேஜ் ஒரு அழகியின் பக்கத்திலிருந்து வந்தது. பெயர் ஷ்ரேயா.
அவள் போஸ்ட் செய்யும் படங்கள் – கடற்கரை, கேஃபேக்கள், சிரிப்பும் சிரிப்பும் – ராகுலின் இதயத்தைத் தொட்டன. "ஹாய், எப்படி இருக்கீங்க? உங்க படங்கள் சூப்பர்!" என்று தொடங்கிய உரையாடல், சில நாட்களில் நெருக்கமானது. ஷ்ரேயா தனது வாழ்க்கை பற்றி பகிர்ந்தாள் – தனியாக வாழ்வது, நகரத்தில் தனிமை, சந்தோஷமான சந்திப்புகளுக்கான ஆசை.
ராகுல், அவளின் வார்த்தைகளில் மயங்கினான். "நேரில் சந்திப்போம், பேசலாம்," என்று அவள் சொன்னதும், அவன் உற்சாகமானான்.அடுத்த வாரம், அவள் ஒரு ஹோட்டலை பரிந்துரைத்தாள். "அங்கே அமைதியா இருக்கும். நான் வர்றேன்." ராகுல், தனது சம்பளத்தில் பாதியை எடுத்துக் கொண்டு, புதிய ஷர்ட் உடுத்தி, ஹோட்டலுக்கு சென்றான்.
அங்கே ஷ்ரேயா இருந்தாள் – இன்ஸ்டாவில் இருந்ததை விட இன்னும் அழகாக. அவர்கள் பேசினார்கள், சிரித்தார்கள். ரூமுக்கு போகலாமா.. வெக்கத்தில் கன்னம் சிவக்க கேட்டாள் ஷ்ரேயா. "இங்கே ரொம்ப ஃபன்னா இருக்கும்" என்று சொல்லி அழைத்து சென்றாள்.
அறையில், விஷயங்கள் வேகமெடுத்தன. ராகுல், ஆசையில் மூழ்கினான். ஷ்ரேயா அவனை அரவணைத்துக்கொண்டாள். தன்னுடைய பணிவிடைகளை செய்ய தொடங்கினால். ஷ்ரேயா தனது உள்ளத்தில் இருந்து ஆணுறை பாக்கெட்டை எடுத்து ராகுலின் உள்ளங்கையில் திணித்தாள். அவளின், ஆடைகள் அனைத்தும் தரையில் கிடந்தன. இதெல்லாம் கனவா.. இல்ல, நிஜமா ராகுல் உடம்பில் பதட்டம் நிறைந்திருந்தது.
சில நிமிடங்களில் இருவரும் நான்கு சுவற்றுக்குள் உல்லாச பறவைகளாக சிறகடித்தனர். ஆனால், திடீரென கதவு திறந்தது. இன்னொரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளே நுழைந்தார்கள். ஒருவன் கையில் போன் – வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான். "இது போகட்டும், உன் வாழ்க்கை முடிஞ்சுடும்" என்று சிரித்தார்கள்.
ராகுல் அதிர்ந்து போனான். அவர்கள் அவனது உடைகளை கிழித்தனர், புகைப்படங்கள் எடுத்தனர். "பணம் கொடு, இல்லைனா உன் குடும்பத்துக்கும்.. நீ வேலை செய்யும் இடத்துக்கும் அனுப்பிடுவோம்" என்று மிரட்டினார்கள்.ராகுல் போராடினான், ஆனால், அவமானத்தில் வெட்கி குனிந்தான். பணத்தை பிடுங்கி கொண்டு அவர்கள் அவனை அடித்து, நிர்வாணமாக ஓட வைத்தார்கள். "வெளியே போ!" என்று கத்தினார்கள்.
ராகுல், அவமானத்துடன், உயிர் பிழைத்தால் போதும் என ஹோட்டலில் இருந்து ஓடினான். வெளியே, பொதுமக்கள் அவனைக் கண்டனர். "என்னடா இது?" என்ற கூட்டம் சூழ்ந்தது. அவர்கள் ராகுலைப் பிடித்து, அடிக்க ஆரம்பித்தார்கள்.
"இப்படி ஒரு பெண்ணை நம்பி வந்தவன்!" என்று கிசுகிசுக்க தொடங்கினார்கள். ராகுல், கண்ணீர் விட்டு கதறினான். "இல்லை... அது டிராப்... என்னை ஏமாத்தினார்கள்..."அப்போது, ஒரு இளைஞன் அவன் கதையைக் கேட்டான். உடனே அருகில் இருந்த ஒரு துணி கடைக்குள் ஓடிச்சென்று.. அவனுக்கு ஆடைகளை கொண்டு வந்து கொடுத்தான்.
விவரம் அறிந்து காவலர்கள், ராகுலை அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவன் உண்மையைச் சொன்னான். "இன்ஸ்டாகிராமில் பழகினோம். அவள் என்னை ஹோட்டலுக்கு அழைத்தாள். அங்கே நடந்தது. பின் அந்த ஆண்கள் வந்து, வீடியோ எடுத்து மிரட்டினார்கள். என்னை அவிழ்த்து, அடித்து துரத்தினார்கள்." காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது ஒரு புதிய வகை ஹானி டிராப் – சமூக வலைதளங்களில் பெண்கள் ஆண்களை மயக்கி, அவமானப்படுத்தி பணம் பறிப்பது.இதே போல், கேரளாவில் நடந்த ஒரு சம்பவம், ராகுலின் கதையை நினைவுபடுத்தியது.
பதனம்திட்டாவில், ஒரு தம்பதி – ஜெயேஷ் மற்றும் ரேஷ்மி – இரண்டு இளைஞர்களை ஹானி டிராப்பில் சிக்க வைத்தனர். ரேஷ்மி, சமூக வலைதளத்தில் பழகி, அவர்களை தனது வீட்டுக்கு அழைத்தாள். "உல்லாசமா இருக்கலாம்" என்று ஆசை காட்டினாள். அங்கே, ஜெயேஷ் வந்து, அவர்களை பிடித்து கொள்ளை அடித்தான்.
ஐஃபோன்கள், பணம் எல்லாம் பறித்து, அவர்களை கட்டி வைத்து சித்திரவதை செய்தனர். ஸ்டேப்ளர் பின்கள் உடலில் காயங்கள், மிளகாய் தூள் தெறித்தல் – அது போன்ற படுகொடுமைகள். ஒரு இளைஞன், காயங்களுடன் தப்பி, போலீசில் புகார் கொடுத்தான்.
தம்பதி கைது செய்யப்பட்டனர். "எங்கள் கடனை அடைக்க இப்படி செய்தோம்" என்று அந்த தமப்தியினர் சொன்னார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட இளைஞர்கள், உயிருடன் தப்பினதே அதிர்ஷ்டம்.
ராகுலின் விசாரணை முடிந்தபின், போலீஸ் ஷ்ரேயாவின் சமூக வலைதளக் கணக்கைத் தேடத் தொடங்கியது. அது போலி. இது போன்ற கும்பல்கள், சமூக வலைதளங்களை ஆயுதமாக்கி, இளைஞர்களை அழித்து வருகின்றனர்.
முன்பு பணம் திருடுவது மட்டுமல்ல, இப்போது அவமானம் மூலம் அழுத்தம் கொடுப்பது. ராகுல், தனது வேலையை இழக்கலாம், குடும்பத்தினர் தன் மீது கொண்ட அபிமானத்தை இழக்கலாம் என்ற பயத்தில் அஞ்சினான். ஆனால், போலீஸ் உறுதியாக இருந்தது.
"இது எச்சரிக்கை," என்று காவலர் சொன்னான்.இணையத்தில்.. உலாவும் இளைஞர்களே, அழகியின் சிரிப்பில் மயங்காதீர்கள். "ஹாய், எப்படி இருக்கீங்க?" என்ற வார்த்தை.. எலி கூண்டில் வைக்கப்பட்ட தேங்காய் துண்டாகவும்.. நீங்கள் எலியாகவும் இருக்கலாம்..
நேரில் சந்திப்பு, உல்லாச ஆசை போன்ற அஜால் குஜால் ஆசையின் விளைவு ஆபத்தாக மாறலாம். இது கதை அல்ல உண்மை. பாதுகாப்பாக இருங்கள்.
இது போன்ற பல கிரைம் சம்பவங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் என்ற
