ஒரு படத்தில் அறிமுகமாகும் நடிகை அந்த படம் வெற்றியடைந்தாலும் தொடர்ந்து படங்களில் நடிப்பார்கள். தோல்வியை சந்தித்தாலும் அடுத்த படம் வெற்றியாக அமையும் என்று அவரது நடிப்பை நம்பி வாய்ப்பு கொடுப்பார்கள். ஆனால் நடித்த 2 படங்களும் சரியாக போகாத ஒரு வாரிசு நடிகை, 11 ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவை விட்டு விலகிய நிலையில், தற்போது உடல் எடை அதிகமாகி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.
அந்த நடிகை வேறு யாரும் இல்லை. நடிகை துளசி நாயர் தான். தென்னிந்திய சினிமாவில் சகோதரி நடிகைகளாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகைகள் தான் ராதா அம்பிகா. இதில் அம்பிகா தொடர்ந்து நடித்து வரும் நிலையில், ராதா திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிவிட்டார். அவரது மகள்கள் தான் கார்த்திகா மற்றும் துளசி. இதில் கார்த்திகா கோ, அன்னக்கொடியும் கொடி வீரனும் ஆகிய படங்களில் நடித்திருந்தார், அவர் நடித்த வா டீல் படம் இதுவரை வெளியாகவில்லை.
மணிரத்னம் இயக்கத்தில் கடல் என்ற படத்தில் அறிமுகமான துளசி நாயர், இந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது 14. 2013-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படம் தான் ராதா அறிமுகமான முதல் படம் இந்த படத்தில் கார்த்திக் நாயகனாக நடித்திருந்தார். அவரது மகன் கௌதம் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் படத்தில் ராதாவின் மகள் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் அரவிந்த் சாமி மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார்.
துளசி நாயர்2
கடல் படம் பெரிய வெற்றியை பெறாத நிலையில், அடுத்து ஜீவாவுடன் யான் என்ற படத்தில் நடித்திருந்தார். 2014-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை ரவி கே சந்திரன் இயக்கியிருந்தார்.இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், துளசி நாயர் சினிமாவில் இருந்து விலகி படிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டார் என தகவல் வெளியானது. படிப்பு முடிந்து மீண்டும் திரையில் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட துளசி நாயர் தற்போது உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். அவரது அக்கா கார்த்திகா திருமணத்தில் கூட சற்று குண்டாக காணப்பட்டு அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தார்.
தற்போது, துளசியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இவர் சினிமாவிலிருந்து விலகி இருக்கிறார். மேலும், சமூக வலைதளங்களிலும் இவர் பெரிய அளவில் ஆக்டிவாக இல்லை. இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும், கடல்பட துளசியா இவர் என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

