சடலமாக மீட்கப்பட்ட 35 வயசு டீச்சர்.. இறந்த போது இருந்த நிலை.. புகார் கொடுக்கவே தயங்கிய கணவன்.. ஆணுறையால் சிக்கிய 17 வயசு மாணவன்..!

35 வயது ஆசிரியை கொடூர கொலை! 17 வயது மாணவனின் காதல் தகாத உறவின் முடிவில் ரத்த வெள்ளம்கொல்கத்தா, நவம்பர் 24, 2025: கொல்கத்தாவின் பரபரப்பான தெருக்களில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
35 வயதான ஆசிரியை அனிதா சாட்டர்ஜி, தனது வீட்டில் கடுமையான காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த அதிர்ச்சிகரமான கொலை வழக்கு, ஒரு சாதாரண ஆசிரியர்-மாணவர் உறவைத் தாண்டி, தடைமீறிய காதல், மிரட்டல், கர்ப்பம் என பல திருப்பங்களுடன் வெளிவந்துள்ளது. போலீசார் விசாரணையில், 17 வயது மாணவன் அர்ஜுன் ராய் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் நடந்தது கொல்கத்தாவின் பூர்பா பாரா பகுதியில் உள்ள அனிதா. சாட்டர்ஜியின் வீட்டில். காலை 10 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த அவரது கணவர் ராஜீவ் பானர்ஜி, மனைவியை ரத்தக் கறையுடன் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த ராஜீவ், "என் மனைவி ஒரு அமைதியான ஆசிரியை. எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை" என கண்ணீருடன் புகார் அளித்தார். போலீசார் ஆரம்பத்தில் ராஜீவ் மீது சந்தேகம் கொண்டு விசாரித்தனர்.
"உங்கள் மனைவியுடன் ஏதேனும் மனக்கசப்பு இருந்ததா?" என கேட்டபோது, ராஜீவ் தனது தாயுடன் மருத்துவமனைக்கு சென்றிருந்ததை ஆதாரங்களுடன் நிரூபித்தார். "தயவு செய்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடியுங்கள்" என அவர் மன்றாடினார்.விசாரணை தீவிரமடைந்தது. வீட்டின் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். ஆரம்பத்தில், சிசிடிவி வாசல் நோக்கி இருந்ததால், உள்ளே வருபவர்களின் உருவம் ஒரு வினாடியில் தோன்றி மறைந்துவிடும் என்பதால், எந்த துப்பும் கிடைக்கவில்லை. ஆனால், நுட்பமான ஆய்வில் ஒரு அதிர்ச்சி! கொலை நடந்த நேரத்தில், அனிதா நடத்திய டியூஷன் வகுப்பில் படித்த 17 வயது மாணவன் அர்ஜுன் ராய், வீட்டுக்குள் வந்து பதிவாகியிருந்தார்.
உடனடியாக அர்ஜுனை கைது செய்த போலீசார், "நான் கொலை செய்யவில்லை. புத்தகம் திருப்பிக் கொடுக்க வந்தேன். டீச்சர் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்" என அவன் கூறியதைக் கேட்டு குழம்பினர்.ஆனால், விசாரணை தொடர்ந்தது. அர்ஜுனின் செல்போன் கைப்பற்றப்பட்டது. அதில், அனிதாவுடன் அடிக்கடி பேசியதும், வாட்ஸ்அப்பில் காதல் மெசேஜ்கள் வந்ததும் தெரியவந்தது. அனிதாவின் போன் ஹிஸ்டரியும் அதையே உறுதிப்படுத்தியது. "இது ஆசிரியர்-மாணவர் உறவைத் தாண்டியது" என போலீசார் உறுதி செய்தனர். பின்னர் வந்த பிரேத பரிசோதனை அறிக்கை, வழக்கை தலைகீழாக மாற்றியது! அனிதா இறக்கும்போது கர்ப்பமாக இருந்திருக்கிறார். இதைக் கேட்ட ராஜீவ் மிரண்டு போனார். "இதற்கு மேல் இந்த வழக்குடன் எனக்கு சம்பந்தமில்லை. அவள் என் மனைவியே இல்லை" என கூறி, விசாரணையில் இருந்து விலகினார்.
கடும் விசாரணையில் அர்ஜுன் உண்மையை ஒப்புக்கொண்டான். "ஆசிரியையுடன் தகாத உறவு இருந்தது. ஆரம்பத்தில் தவிர்த்தேன், ஆனால் அவர் 'இதெல்லாம் சகஜம்' என சொல்லி என்னை இழுத்தார். திடீரென 'நான் கர்ப்பம், நீதான் அப்பா' என மிரட்டினார். என்னை ரகசிய கணவராக வைத்துக்கொள்ள விரும்பினார். என் எதிர்காலம் பாழாகும் என பயந்து, கொலை செய்தேன்" என வாக்குமூலம் அளித்தான். மேலும், ஆசிரியை வீட்டின் பின்புறம் கைப்பற்றப்பட்ட ஆணுறைகளில் இருந்து பெறப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் அர்ஜுன் மாதிரியுடன் ஒத்துப்போவதை உறுதிபடுத்தியது இந்நிலையில் அர்ஜுன் கைது செய்யப்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொல்கத்தா சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆசிரியர்-மாணவர் உறவின் எல்லைகள் குறித்து விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post