“ஆணுறையே வேண்டாம்.. நான் உனக்கு தான்..” வங்கி பெண் ஊழியரின் அந்தரங்க பேச்சு.. இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி..

திருமணமாகாத 40 வயது ஆணை காதல் வலைவீசி ஏமாற்றி, அவரது 7 ஏக்கர் விவசாய நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி மோசடி செய்த பெண் ஒருவரை பெங்களூரு போலீசார் கைது. இந்த சம்பவம், கடன் வாங்குதல் முதல் காதல், நிச்சயதார்த்தம் வரை நீண்ட நாடகமாக அரங்கேறியுள்ளது அப்பாவி ஆண்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது: சுரேஷ்), தொழில் நஷ்டத்தால் தவித்து வந்த நிலையில், தனது 7 ஏக்கர் நிலத்தின் மீது வங்கிக் கடன் பெற முயன்றார். இதற்காக தனியார் வங்கியில் பணியாற்றுவதாகக் கூறிக்கொண்ட 35 வயது பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது: அஸ்மிதா) அவருக்கு அறிமுகமானார். தொலைபேசி உரையாடல்கள் மூலம் நட்பு உருவாகி, படிப்படியாக காதலாக மாறியது. இருவரும் சினிமா, உணவகங்களுக்கு சென்று நேரம் செலவிட்டனர். ஒருகட்டத்தில், "நிலம் உங்கள் பெயரில் இருந்தால் கடன் குறைவாகவே கிடைக்கும். என் பெயருக்கு மாற்றினால் அதிக தொகை கிடைக்கும், வட்டியும் குறைவு" என வங்கி ஊழியர் என்ற நம்பிக்கையில் அஸ்மிதா ஆலோசனை வழங்கினார்.
சுரேஷ் திருமணமாகாதவர் என்பதால், அஸ்மிதா "உங்கள் வாழ்க்கைத் துணையாக வர விரும்புகிறேன்" எனக் கூறி காதலை வளர்த்தார். இரவு நேர உரையாடல்கள், நெருக்கமான சந்திப்புகள், உல்லாசம் வரை சென்றது. சுரேஷ் வெளியிட்ட ஆடியோ ஆதாரங்களில், அஸ்மிதா ஒரு ஆடியோவில், ஆணுறை எல்லாம் அணிய தேவையில்லை நீங்கள் தானே என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் கொள்ளப் போகிறீர்கள் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என திருமணத்திற்கு முன்பே சுரேஷுடன் உல்லாசமாக இருக்கும் அளவுக்கு பழகி இருக்கிறார்.
இதன் பிறகு, நிச்சயதார்த்தம் நடத்தி, 2026-ஆம் ஆண்டு தை மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.இந்த நம்பிக்கையில், சுரேஷ் தனது 7 ஏக்கர் நிலத்தை அஸ்மிதா பெயருக்கு கிரயம் செய்து எழுதிக் கொடுத்தார். ஆனால், நிலம் மாறிய பிறகு அஸ்மிதாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்கத் தொடங்கினார். சுரேஷ் அவரது வீட்டுக்குச் சென்றபோது வேறு குடும்பம் வசிப்பது தெரியவந்தது.பின்னர் அஸ்மிதா நிலத்தை தனது உரிமையாகக் கோரி விற்க முயன்றது தெரியவந்தது.
போலீசாருக்கு புகார் அளித்ததும் விசாரணையில் உண்மைகள் வெளியாகின: அஸ்மிதா வங்கி ஊழியர் அல்ல, கால் சென்டர் ஊழியரும் கடன் ஏஜென்டுமாக பணியாற்றியவர். இதே முறையை அவரது தோழி கீர்த்தனா 2023-இல் பயன்படுத்தி 2 ஏக்கர் நிலத்தைப் பெற்று விவாகரத்து பெற்று செட்டிலானதும், அவரைப் போலவே நானும் செட்டிலாகிறேன் என அஸ்மிதா இந்த தில்லாலங்கடி வேலைகளை செய்தது தெரியவந்தது. போலீசார் அஸ்மிதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காதல், திருமண ஆசை காட்டிய மோசடிகள் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.
எச்சரிக்கை: கடன் விஷயங்களில் வங்கியை நேரடியாக அணுக வேண்டும். ஆசைவார்த்தைகளால் சொத்துக்களை மாற்றும் முன் சட்ட ஆலோசனை பெறவும். இது போன்ற பலரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். (பாதிக்கப்பட்டோரின் தனிநபர் விவரங்கள் பாதுகாப்புக்காக மாற்றப்பட்டுள்ளன.)

Post a Comment

Previous Post Next Post