மகளை பிரசவத்துக்கு அழைத்து வந்த தந்தை..! கர்ப்பத்திற்கு காரணம் தெரிந்து நடுங்கிப்போன போலீஸ்..!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே தேங்காய் வியாபாரியாக இருக்கும் நபர், தனது 17 வயது சொந்த மகளையே தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளார். கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குற்றம்சாட்டப்பட்ட தந்தை போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.போலீசார் மற்றும் மருத்துவமனை வட்டாரங்களின்படி, 12ஆம் தேதி படித்து வந்த 17 வயது சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. தந்தையே அழைத்துச் சென்று திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பிரசவம் பார்த்துள்ளார். பிறந்த குழந்தையை ‘அம்மா தொட்டில்’ திட்டத்தின் கீழ் ஒப்படைத்துவிட்டு திரும்பியுள்ளனர். இந்த தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு, போலீசார் மருத்துவமனைக்கு விரைந்தனர். அப்போது சிறுமியுடன் தந்தை மட்டுமே இருந்தார்.முதலில் நடத்திய விசாரணையில் சிறுமி “தான் காதலித்த இளைஞனே காரணம், அவன் பெயரை எக்காரணத்துக்காகவும் சொல்ல மாட்டேன்” என உறுதியாகக் கூறினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், சிறுமிக்கு பலகட்ட உளவியல் ஆலோசனை வழங்கிய பின்னரே உண்மை வெளிவந்தது. தந்தையே தனது சொந்த மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததும், கர்ப்பம் தெரிந்ததும் மனைவிக்கும் மகனுக்கும் தெரியக்கூடாது என்பதற்காக திருவனந்தபுரம் அழைத்துச் சென்று பிரசவம் பார்த்ததும் தெரியவந்தது. மனைவி, “வெளியே தெரிந்தால் பெரிய அவமானமாகிவிடும்” என பயந்து இந்த குற்றத்தை மறைத்து உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடிப்படையில் தந்தை மீது போக்சோ சட்டப் பிரிவு, பாலியல் குற்றங்கள் திருத்தச் சட்டப் பிரிவுகள் உள்ளிட்டவை சேர்த்து வழக்கு பதிவு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post