ரொம்ப டைட்டா இருக்கு.. என்னால முடியல.. உ.ட.லு.றவின் போது கணவன் செய்த அசிங்கம்.. துடிதுடித்து இறந்த மனைவி!

பெங்களூருவின் பரபரப்பான வாழ்க்கையில், ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் பூஜஸ்ரீ. வங்கியில் கேஷியராக வேலை செய்து, தன் வாழ்க்கையை நிமிர்த்திப் பிடித்தவள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நந்தீஷ் என்ற இளைஞனைத் திருமணம் செய்து கொண்டாள். அவர்களுக்கு ஒரு சின்னஞ்சிறு மகள் இருந்தாள் – அந்தக் குழந்தையின் சிரிப்பொலிதான் பூஜஸ்ரீயின் உலகம்.
திருமணத்துக்காக பூஜஸ்ரீயின் தாய், தன் தந்தையிடம் இருந்து 30 லட்ச ரூபாய் கடன் வாங்கி செலவழித்தார். தங்க நகைகள், பொருட்கள் – எல்லாம் கொடுத்தார். ஆனால் திருமணத்துக்குப் பிறகு, உண்மை முகம் வெளிப்பட்டது. நந்தீஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. பூஜஸ்ரீ அதைத் தெரிந்து கொண்டு கேள்வி கேட்ட போதெல்லாம், சண்டை, திட்டு, இன்னும் அதிக தட்டு கேட்பது – இதுவே அன்றாடம் ஆகிப்போனது. “வீடு வேணும், இன்னும் பணம் வேணும்” என்று நந்தீஷும் அவன் குடும்பமும் துன்புறுத்தினார்கள். பூஜஸ்ரீயின் சம்பளம், நகைகள், எல்லாவற்றையும் பறித்துக் கொண்டார்கள். குடும்ப உறவினர்கள் பலமுறை சமாதானம் செய்ய முயன்றார்கள். ஒருமுறை போலீசிலேயே நந்தீஷ் நன்றாக நடத்துவேன் என்று உறுதி அளித்தான். ஆனால் எதுவும் மாறவில்லை. துன்புறுத்தல் தொடர்ந்தது.
பூஜஸ்ரீயின் பாட்டி சொன்னார்: “திருமணத்துக்கு முன் நந்தீஷின் சொத்து, பின்புலம் எல்லாம் பொய்யாகச் சொன்னார்கள். நம்மை ஏமாற்றினார்கள். நகை கொடுத்தும், இன்னும் துன்புறுத்தினார்கள்.” பூஜஸ்ரீயின் தாய் கதறினார்: “என் மகளை தினமும் துன்புறுத்தினான். அவன் தகாத உறவுக்காகவும், பணத்துக்காகவும், போலீசில் அவன் இனிமே நல்லா பாத்துக்குறேன் என்று உறுதியளித்தும் மாறவில்லை. அன்று காலை 7:15 மணிக்கு என் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றான். 8:20க்கு போன் செய்து, ‘அவள் தற்கொலை செய்துகொண்டாள்’ என்றான். என் மகளை அவர்கள் கொன்றுவிட்டார்கள்.”
பூஜாஸ்ரீயின் தோழிகள் கண்ணீர் : எப்போது பணம் பணம், வேறு பெண்ணுடன் உறவு. உடலுறவு கொள்ளும் நேரத்தில் கூட கொஞ்சம் டைட்டா இருக்கு, பணம் ரெடி பண்ணி குடு என கேட்டு, உன்கூட படுக்கையில் இருக்கணும்னா எனக்கு பணம் குடுக்கணும் என்றெல்லாம் கேட்டு எங்கள் தோழியை மன ரீதியாக கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கினான், உலகத்தில் எந்த புருஷனாவது இப்படி செய்வானா..? என்று விரக்தியுடன் கூறினார்கள். செப்டம்பர் 1 அன்று காலை, சைடேஹள்ளியில் உள்ள அவர்கள் வீட்டில் பூஜஸ்ரீ தூக்கிட்டு இறந்து கிடந்தாள். அவள் உடல் விக்டோரியா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பாகலகுண்டே போலீசார் வரதட்சனை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய குற்றங்களில் வழக்கு பதிவு செய்து, நந்தீஷையும் அவன் குடும்பத்தினரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
பூஜஸ்ரீயின் மரணச் செய்தி ஒரு உறவினருக்கு தெரிந்ததும், அதிர்ச்சியில் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டார். ஒரு இறப்பு, இன்னொரு இறப்பை இழுத்து வந்தது. இதே போல, ஒரு வாரத்துக்கு முன்பு, 27 வயது ஷில்பா என்ற இளம்பெண்ணும் பெங்களூருவில் தவறான முடிவெடுத்துக்கொண்டு இறந்தாள். இன்போசிஸில் வேலை செய்தவள், திருமணத்துக்காக 40 லட்ச ரூபாய், 160 கிராம் தங்கம் கொடுத்தும், மாமியார் குடும்பத்தினரின் வரதட்சனை கேட்பு நிற்கவில்லை. ஷில்பாவுக்கு ஒன்றரை வயது குழந்தை இருந்தது, மீண்டும் கர்ப்பமாக இருந்தாள். அவள் கணவன் பிரவீன், பொறியியல் படித்தவன் என்று சொல்லி, பின்னர் பாணி பூரி, பர்கர், ஷவர்மா என வியாபாரம் தொடங்கி நஷ்டமாகி கடைசியில் மனைவியின் பெற்றோர்களை நச்சரித்து வாழ்க்கையை நாசம் செய்து கொண்டான். போலீசார் அவனை கைது செய்தனர்.
இந்த இரு கதைகளும் ஒரே வலியைச் சொல்கின்றன – வரதட்சனை என்ற கொடிய பழக்கம் இன்னும் உயிர்களை பலிகொள்கிறது. பெங்களூர் போன்ற நவீன நகரத்தில் கூட, பெண்களின் வாழ்வு இப்படி துன்பத்தில் முடிகிறது. பூஜஸ்ரீயின் சின்ன மகள் இப்போது தாயில்லாமல் தவிக்கிறாள். ஷில்பாவின் குழந்தைகள் தாயை இழந்து நிற்கின்றன. இந்தக் கதைகள் வெறும் செய்திகள் அல்ல – ஒவ்வொரு பெண்ணின் கண்ணீரும், ஒவ்வொரு குடும்பத்தின் உடைந்த கனவுகளும். சமூகம் இதை எப்போது மாற்றும்?

Post a Comment

Previous Post Next Post