வீட்டுக்கு வா..! காதலியை நம்பி சென்ற காதலன், மர்ம உறுப்பை துண்டித்த 25 வயது பெண்...

வீட்டுக்கு வா..! காதலியை நம்பி சென்ற காதலன், மர்ம உறுப்பை துண்டித்த 25 வயது பெண்...
கிழக்கு கிழக்கு சாண்டாக்ரஸ் பகுதியை சேர்ந்த மும்பையை சேர்ந்த 25 வது இளம்பெண், புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அடுத்த சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பெண், காதலனை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது செய்தது. மர்ம உறுப்பை தாக்கி உயிருக்கு ஆபத்தான காயங்களை ஏற்படுத்துவதாகவும், ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம்தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த பெண்ணையும் கைது செய்தனர்.
திருமணத்தை மீறிய உறவு.. விசாரணையில் வெளியாகியுள்ள தகவலின்படி, பாதிக்கப்பட்டவர் 44 வயதான ஜோகிந்தர் லகன் மஹதோ. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர் 25 வயதான கஞ்சன்தேவி ராகேஷ் மஹதோ. தனது மனைவியை பிரிந்து வந்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜோகிந்தரை அந்த இளம்பெண் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால்,ஏற்கனவே காஞ்சன் தேவிக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதால், அவர்களுக்கு இடையே திருமணம் சாத்தியமில்லை என அவர் மறுத்துள்ளார்.
உறவை துண்டித்த காதலன் காவல்துறையில் பதிவாகியுள்ள வழக்கின்படி, கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக ஜோகிந்தர் மற்றும் காஞ்சன்தேவி உறவில் ஈடுபட்டுள்ளனர். மனைவியை விட்டுவிட்டு தன்னுடன் வாழ வேண்டும் என ஜோகிந்தரை காஞ்சன்தேவி வற்புறுத்தத் தொடங்கியது முதலே இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்துள்ளது. அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே அடிக்கடி வாக்குவாதங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் கடந்த ஆண்டு நவம்பர் ஜோகிந்தர் பீகாரில் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். காஞ்சன்தேவியை தொடர்புகொள்வதையும் தவிர்த்துள்ளார்.
காதலனின் மர்ம உறுப்பை துண்டித்த இளம்பெண் ஆனால், அந்த பெண்ணோ மீண்டும் மீண்டும் அவரை தொடர்புகொண்டு மீண்டும் மும்பைக்கு வந்து தன்னை திருமணம் செய்துகொண்டார் செய்துகொள்ள வேண்டும் என மிரட்டியுள்ளார். இதையடுத்து கடந்த டிசம்பர் 19ம் தேதி மும்பைக்கு வந்த ஜோகிந்தர், 24ம் தேதி இளம்பெண்ணை சந்தித்துள்ளார். தங்களுக்கு இடையே ஏன் திருமணம் சாத்தியமில்லை என்றும் விளக்கியுள்ளார். இந்நிலையில் தான், கடந்த 31ம் தேதியன்று மாலை மீண்டும், ஜோகிந்தரை புத்தாண்டை கொண்டாடுவதற்காக தனது வீட்டிற்கு வரும்படி காஞ்சன்தேவி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி சென்றபோது அதிகாலை நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை: அப்போது தான் மறைத்து வைத்து இருந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு தாக்கி, ஜோகிந்தரின் மர்ம உறுப்பை துண்டித்துள்ளார்.இதனால் அலறிதுடித்து ஒரு வழியாக அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த ஜோகிந்தர், தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் விரைந்து வந்து சகோதரரை மீட்டு, விஎன் தேசாய் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு ஜோகிந்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Post a Comment

Previous Post Next Post