கடலூர் மாவட்டம், திட்டக்குடி என்ற சிறிய ஊரில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொடூர இரவு தொடங்கியது. அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்த 13 வயது சிறுமியும், எட்டாம் வகுப்பு படித்த 14 வயது சிறுமியும் சிறந்த தோழிகளாக இருந்தனர். பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில், அவர்களின் வாழ்க்கை என்றென்றும் மாறிவிடும் ஒரு சூழ்ச்சியின் வலையில் சிக்கி.
ஊரில் இட்லி கடை நடத்தி வந்த தனலட்சுமி (35) என்ற பெண், அந்த இரண்டு சிறுமிகளையும் ஆசை வார்த்தை கூறி தனது கள்ளக்காதலன் ஆனந்தராஜனின் காம வெறிக்கு இரையாக்கினாள்.
விவரம் புரியாமல் பணிந்த சிறுமிகளை தொடர்ந்து மிரட்டல்கள், வற்புறுத்தல்கள் கொடுத்து தனது சுய லாபத்தை பயன்படுத்திக்கொண்டாள் தனலட்சுமி.அந்த, அப்பாவி குழந்தைகள் தப்ப முடியவில்லை. காதலனின் பசி தீர்ந்ததும், தனலட்சுமி அடுத்த திட்டத்தை வகுத்தாள் – அவர்களை விபச்சாரத்தில் தள்ளுவது.
விருதாச்சலத்தில் தனக்கு தெரிந்த விபச்சார புரோக்கரான கலாவின் வீட்டுக்கு சிறுமிகளை கடத்திச் சென்றாள். அங்கு அன்பு என்ற செல்வராஜ் மூலம் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். பின்னர், திட்டக்குடியைச் சேர்ந்த மத போதகர் அருளதாஸ் வீட்டுக்கு இரண்டு நாட்கள் உல்லாசத்துக்கு அனுப்பி வைத்தாள் தனலட்சுமி.
பிறகு, தனலட்சுமியும் கலாவும் சேர்ந்து சிறுமிகளை விழுப்புரம், வளவனூர், சேலம், வடலூர், நெய்வேலி போன்ற பல இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர்.
இறுதியில், அரியலூர் மாவட்டம் இடையக்குறிச்சியைச் சேர்ந்த சதீஷ் குமார் (39 வயது) மற்றும் அவரது மனைவி தமிழரசியிடம் சிறுமிகளை விற்றனர்.
சதீஷ் குமாரும் தமிழரசியும் வடலூரில் ஒரு வாடகை வீட்டில் சிறுமிகளை தங்க வைத்து, ஒரு நாளில் 8 முதல் 15 பேர் வரை ஈவிரக்கமின்றி விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர்.
வீடு முழுவதும் ஆணுறை பாக்கெட்டுகள், மது, சிகரெட் புகை, போதை வஸ்துக்கள் வாசனை, அரக்கர்களின் கொடூர பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் முடங்கினர். சிறுமிகள். ஆனால், அவர்களின் கொடூர வாழ்க்கையில் இருந்து தப்பிக்கும் ஒரு தருணம் வந்தது.
சதீஷ், தமிழரசி இருவரின் அன்றாட பழக்கங்களை கண்காணிக்க தொடங்கினர் சிறுமிகள். அதன்படி, அவர்கள் அந்த நேரத்தில் இரண்டு சிறுமிகளும் தப்பி ஓடினர். ஊர்மக்களிடம் வழி கேட்டு திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். அழுதபடி புகார் அளித்தனர். காவல் நிலையம் அதிர்ந்தது.
புகாரின் பேரில் 23 பேர் மீது வழக்கு பதிவானது. சதீஷ் குமார், தமிழரசி உட்பட சிலர் தலைமறைவாகினர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மற்ற 19 பேர் கைது செய்யப்பட்டனர், ஆயுள் தண்டனை மற்றும் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், சதீஷ் குமார் – தமிழரசி தம்பதி மட்டும் பல ஆண்டுகள் தப்பியோடினர். போலீசார் தேடுதல் தொடர்ந்தது. கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சதீஷ் குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்தபோது, திருவண்ணாமலையில் வேலை பார்த்து வந்த தமிழரசியும் கைது செய்யப்பட்டார். மேலும் தொடர்புடைய கபிலன் என்ற இன்னொருவரும் கைதானார்.
அனைத்து விசாரணைகளும் முடிந்து, கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதி குலசேகரன் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் குற்றச்சாட்டை மறுத்தனர்.
சதீஷ் குமாரும் கபிலனும் "பொய் வழக்கு" என்றும், தமிழரசி "எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை, இவர்கள் யார் என்று தெரியாது" என்றும் அந்தர்பல்டி அடித்தனர்.
ஆனால் ஆதாரங்கள், சாட்சியங்கள், சிறுமிகளின் வாக்குமூலங்கள் அனைத்தும் அவர்களுக்கு எதிராக இருந்தன. குற்றம் நிரூபிக்கப்பட்டது. நீதிமன்றம் தீர்ப்பளித்தது:
சதீஷ் குமார், தமிழரசி, கபிலன் ஆகிய மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை.
சதீஷ் குமாருக்கு ₹45,000 அபராதம்.
தமிழரசிக்கு ₹30,000 அபராதம்.
கபிலனுக்கு ₹15,000 அபராதம்.
இந்தத் தீர்ப்பு, 12 ஆண்டுகளாக திட்டக்குடியை கதிகலங்க வைத்திருந்த கொடூர சம்பவத்துக்கு ஒரு முடிவு கட்டப்பட்டது.
ஆனால் அந்த இரண்டு சிறுமிகளின் கண்ணீரும், அவர்கள் இழந்த குழந்தைப் பருவமும் அழியாத சுவடாக அந்த ஊரில் நிலைத்திருக்கும். நீதி தாமதமாக வந்தாலும், வந்தது – ஆனால் அந்தக் காயங்கள் ஆறுவதற்கு இன்னும் நெடுங்காலம் ஆகும்.
