இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால், தமிழில், துப்பாக்கி, அஞ்சான், மதராசி படங்களில் நடித்துள்ளார். இவர் ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ என்ற ஹாலிவுட் ஆக்ஷன் படத்தில் நடிப்பதை ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான பரமவுண்ட் பிக்சர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்காப்புக் கலையில் ஆர்வமுள்ள இவர் நிர்வாணமாக மரம் ஏறும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் “களரிப்பயிற்சி செய்பவன் என்ற முறையில், நான் ஆண்டுக்கு ஒருமுறை சஹஜம் என்ற யோகப் பயிற்சியில் ஈடுபடுகிறேன். இயற்கையான எளிமை மற்றும் உள்ளுணர்வு நிலைக்குத் திரும்புவதாகும். இது இயற்கையுடனும் உள் உணர்வுடனும் ஆழமான தொடர்பை வளர்க்கின்றன.
அறிவியல் ரீதியாக, இது பல நரம்பு ஏற்பிகளையும், உடல்நிலை உணர் கருவிகளையும் தூண்டி, புலன் உணர்வுத் தகவல்களை மேம்படுத்தி சமநிலை, ஒருங்கிணைப்பைச் செம்மைப்படுத்துகிறது. இது மேம்பட்ட உடல் விழிப்புணர்வு, கவனக் குவிப்பை அதிகரித்தது. மேலும், ஆழமான மன அமைதிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். தனது நிர்வாணத்தை மறைக்க அவர் இமோஜியையும் வீடியோவில் இணைத்திருந்தார்.
சஹஜம் பயிற்சியின் ஒரு பகுதியாக கடுங்குளிரில் படுப்பது நிர்வாணமாக காட்டுக்குள் தங்குவது போன்ற விஷயங்களை நடிகர் வித்யுத் ஜம்வால் செய்வார். கட்டுமஸ்தான உடல் அமைப்பை கொண்ட இந்திய நடிகர்களுள் ஒருவர். இவருக்கு இப்போது 45 வயதாகிறது. இவரை, உலகின் மிக கவர்ச்சியான ஆண்களின் பட்டியலிலும் இவரும் இடம்பெற்றுள்ளார்.
