பக்தி பரவசத்தில் தன்னை மறந்து, கடிக்கத் தொடங்கிய நடிகை சுதா!! வைரல் வீடியோ...!

ஜனவரி 3 ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற மாதா கி செளக்கி என்ற ஆன்மிக நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. தொலைக்காட்சி துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பஜனை நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது நடிகையும் நடன கலைஞருமான சுதா சந்திரன் திடீரென தன்னை கட்டுப்படுத்த முடியாமல் நடந்து கொண்டுள்ளார். அதாவது, இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில். பக்தி பரவசத்தில் வெள்ளை மற்றும் சிவப்புநிற புடவையணிந்து, நெற்றியில் ஜெய் மாதா ஜி என்று எழுதப்பட்ட துணையை கட்டிக்கொண்டிருந்த சுதா சந்திரன், தொடக்கத்தில் அமைதியாக அமர்ந்து நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.
சில நிமிடத்தில் நாற்காலியில் அமர்ந்தபடியே கத்தி, உடலை அசைத்து, ஆக்ரோஷமாக ஆடத்தொடங்கினார். இதை கண்ட அருகில் இருந்தவர்கள், அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் சுதா சந்திரன் கதறி அழுத்தொடங்கிதோடு, அவரை தடுக்க வந்த ஒருவரின் கையை கடிக்கவும் முயன்றிருக்கிறார். இந்த காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியும் இது நடிப்பு இல்லை, நாகினியாகவே மாறிவிட்டார் என்று கலாய்த்தும் வர்ய்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post