250 கோடிக்கு சொத்து வைத்துள்ள 23 வயது சின்னத்திரை நடிகை யார் தெரியுமா?

சின்னத்திரை நடிகை ஒருவர், தனது 23 வயதில் ரூ.250 கோடிக்கு சொத்து வைத்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆனால் அதுதான் உண்மை. யார் அந்த நடிகை, அவரின் நிகர மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேலும், இந்த தான், சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளதாக கூறப்படுகிறது. 23 வயதில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள இவர், தனது நிகர மதிப்பு காரணமாக பிரபல நட்சத்திரங்களையும் பின் தள்ளியுள்ளார். இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றுள்ளார்.
இவரின் பெயர் ஜன்னத் ஜுபைர். வெறும் 23 வயதில் அசைக்க முடியாத நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளார்.
பிரபல பொலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இன்ஸ்டாகிராமில் 46 மில்லியனுக்கும் அதிகமானோர் ஷாருக்கானை பின்தொடர்பவர்கள் உள்ளனர். இருப்பினும், நடிகை ஜன்னத் ஜுபைருக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கானை விட அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஜன்னத் மட்டும் 49.7 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். ஷாருக்கான் மட்டுமல்ல, இந்தியாவில் அதிகம் பின்தொடரும் பிரபலங்களில் ஜன்னத்தும் ஒருவர். ஜன்னத் ஆகஸ்ட் 29, 2001 அன்று மும்பையில் பிறந்தார்.
குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சியில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தற்போது சினிமா துறையில் பெரிய நட்சத்திரமாக உள்ளார். மேலும், 'கத்ரோன் கே கிலாடி' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர் என்ற சாதனையை ஜன்னத் படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், ஒரு தொடருக்கு ரூ.18 லட்சம் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இதுமட்டுமல்ல 'நவ்வு செஃப்' ஒரு எபிசோடிற்கு ரூ.2 லட்சமும், சமூக ஊடகங்களில் ஒவ்வொரு பதிவிற்கும் ரூ.1.5 முதல் ரூ.2 லட்சம் வரை பெற்றுள்ளார். நடிகை ஜன்னத் ஜுபைர் தனது 21வது வயதில் மும்பையில் சொந்த வீட்டை வாங்கியுள்ளார். ஜன்னத் ஒரு நடிகை மட்டுமல்ல. மிகவும் வெற்றிகரமான தொழிலதிபரும் ஆவார். ஊடக அறிக்கைகளின்படி, ஜன்னத்தின் நிகர மதிப்பு சுமார் ரூ.250 கோடி என்று கூறப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post