கர்நாடக மாநிலம் பெங்களூரு புட்டேனஹள்ளி பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சையது இனாமுல். இவருக்கு 32 வயதில் மனைவி இருக்கிறார். இந்த நிலையில், தனது மனைவியை சையது இன்னா ஆபாசமாக வீடியோ எடுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து புத்தேனஹள்ளி மருத்துவமனையில் அந்த பெண் கணவர் சையது இனாமுல் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த முறைப்பாட்டில் “எனக்கும், சையது இனமுலுக்கும் கடந்த ஆண்டு(2024) செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
பின்னர் டிசம்பர் 15 ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக 340 கிராம் தங்க நகைகள், ஒரு மோட்டார் சைக்கிளை எனது பெற்றோர் கொடுத்தனர்.
ஆரம்பத்தில் என்னுடன் சந்தோஷமாக கணவர் குடும்பம் நடத்தினார். அதன்பிறகு, எனக்கு பல்வேறு தொல்லைகளை அவர் கொடுத்து வருகிறார்.
எங்கள் வீட்டின் படுக்கை அறையில் எனக்கு தெரியாமல் ரகசியமாக கண்காணிப்பு கேமராவை சையது இனாமுல் பொருத்தி உள்ளார்.
அதாவது கடந்த ஜூன் மாதம் விநாயகா நகரில் வாடகை வீட்டில் குடியேறினோம். அங்கு தான் படுக்கையில் ரகசிய கேமராவை பொருத்தி இருந்தார். நானும், கணவரும் தாம்பத்தியத்தில் ஈடுபட்டதை வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். டுபாயில் வசிக்கும் ஒரு நண்பருக்கும், நான் கணவருடன் தாம்பத்தியத்தில் ஈடுபடும் வீடியோவை அனுப்பி வைத்திருந்தார்.
டுபாயில் வசிப்பவருடன் உல்லாசம் அனுபவிக்கும்படி எனக்கு எனது கணவர் தொல்லை கொடுத்து வருகிறார். அவர் சொல்வதை கேட்டு நடக்காவிட்டால் விவாகரத்து செய்து விடுவதாக மிரட்டுகிறார்.
மேலும் முதல் திருமணத்தை மறைத்து விட்டு, 2 ஆவதாக என்னை திருமணம் செய்துள்ளார். ஏற்கனவே திருமணத்தின்போது பிரியாணி பரிமாற தாமதம் ஆனதால், கணவரின் உறவினர் அமீன் பேக் தகராறில் ஈடுபட்டு இறந்தார்.
அவரும், தற்போது கணவருடன் சேர்ந்து எனக்கு தொல்லை கொடுக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக என் கணவருக்கு, 19 பெண்களுடன் தொடர்பு உள்ளது.
இதனை அவரே என்னிடம் பலமுறை கூறி இருக்கிறார். வரதட்சணை கேட்டும் தொல்லை கொடுக்கிறார். பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட் வாங்க நகைகளை கேட்டு மிரட்டுகிறார். சில நேரங்களில் அடித்து துன்புறுத்துவார். பொது இடங்களில் கூட என்னை அடித்து தாக்கியுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய முறைப்படி கூறப்பட்டுள்ளது.
அந்த பெண் அளித்த முறைப்பாட்டின் பேரில் புட்டேனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சையது இனாமுல் தலைமறைவாகிய நிலையில் அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
