ஒஸ்ரியா நாட்டில் வசிக்கும் 28 வயது ஆசிரியை, பாடசாலையில் இருந்து வெளியான 17 வயதுடைய முன்னாள் மாணவரை சந்தித்துள்ளார்.
பின்னர், அந்த மாணவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்று விருந்து கொடுத்திருக்கிறார்.
இந்த சந்திப்பு அடிக்கடி நடந்த நிலையில் அவருடன் ஆசிரியை உல்லாசத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
2024-ம் ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரையிலான பலமுறை அவர்களுடைய சந்திப்பு இடம்பெற்ற நிலையில், சந்திக்கின்ற அவர்கள் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பான வீடியோக்களை அந்த மாணவர் பதிவு செய்து வைத்துள்ளார். அவற்றை வேறு சில மாணவர்களிடம் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்து அந்த மாணவர்கள் கும்பலாக ஆசிரியையின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
அங்கு அவர்களிடம் வீடியோவை ஆசிரியையிடம் காணவில்லை என்று மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 7 பேர் கொண்ட மாணவர் கும்பல் ஆசிரியையின் வீட்டிலேயே தங்கி குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளதுடன் நாங்கள் ஒரு குற்றவாளி கும்பல் என்றே கூறி அவரை அச்சுறுத்தி உள்ளனர். இதனை வெளியே கூறினால், மாணவனுடனான வீடியோவை வெளியே பரப்பி விடுவோம் என மிரட்டினர்.
வேலை பறிபோய் விடும் என பயந்து ஆசிரியை எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
வீட்டை விட்டு வெளியேற்ற முடியாமல் தவித்து வருகிறார். அந்த கும்பல் ஈராக், ருமேனியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள். பகலில் கடத்தலில் ஈடுபட்ட அந்த கும்பல், இரவில், அந்த ஆசிரியையிடம் வீடியோக்களை காட்டி மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
உணவு, வாடகை கார், மதுபானம் என பல வகையான தேவைகளுக்கு அவரிடம் இருந்து பணம் பறித்து உள்ளனர்.
அவர்கள் கும்பலாகவும், தனியாகவும் இந்த தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவற்றையும் வீடியோவாக எடுத்து வைத்து, பாடசாலையில் பரப்பி விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
பல மாதங்களாக இந்த கொடூரம் தொடர்ந்த நிலையில், ஒரு நாள் வீட்டுக்கு அவர்கள் தீ வைத்து விட்டு சென்றனர். பொருட்களையும் கொள்ளையடித்து விட்டு தப்பியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் மாணவர் கும்பலில் சிலரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர் வருகின்றனர்.
இதில், அந்த மாணவ கும்பல் பலாத்கார சம்பவம் ஆசிரியையின் சம்மதத்துடனேயே நடந்தது என கூறியுள்ளதாகவும் வீட்டுக்கு தீ வைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
எனினும் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன் வழக்கு விசாரணை வரும் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.
