ஆமா வெட்கமே இல்லாமல் அதை நான் பண்ணுவேன்..! நடிகை அமலா பால்..!

சிந்து சமவெளி திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை பாதியிலேயே முடிந்தது. அந்த மண முறிவுக்கு பிறகு ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். இப்போது சுமூகமாக அவர்களது திருமண வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவும் செய்தார். தேவைப்படும் இடத்தில் கிளாமர் தோற்றம் நடித்தார்; கிளாமர், ஹோம்லி கேரக்டர்களுக்கு செட் ஆகக்கூடிய ஹீரோயினாக திகழ ஆரம்பித்தார். ஆர்யா உள்ளிட்டோருடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற அவர்; ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படத்திலும் ஹீரோயினாக நடித்தார். அதுவும் அவருக்கு பெரிய பிரபல்யத்தை பெற்றுக்கொடுத்தது.
அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கேரளாவில் ரோட்டு கடைகளை தட்டுங்கள் என்று சொல்வார்கள். மஞ்சளாக இருந்தால் நல்ல பழம்பூரி. அந்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு மாஸ்க்கை கழற்றிவிட்டு பழம்பூரியை சாப்பிடுவேன். மேலும் பானிபூரியும் சாப்பிடுவேன். வெட்கமே இல்லாமல் மாஸ்க்கையும் கழற்றிவிடுவேன். அங்கே வருபவர்கள் அமலா பால் என்று ஆச்சரியமாக பார்ப்பார்கள். ஆனால் நானோ அதெல்லாம் இல்லை என்று ஃபன் செய்வேன். கேரளாவில் ரோடு பயணம் செல்வது எனக்கு பிடிக்கும்" என்றார்.

Post a Comment

Previous Post Next Post