மம்முட்டியான் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கேரள மணப்பெண்! வாயடைத்து பார்த்த உறவினர்கள்..!
உலகின் எங்கோ ஒரு மூளையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றுக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது. அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சில வீடியோக்கள் நமக்கு கோபத்தை தூண்டும், சிலவற்றை வேடிக்கையாக கடந்து செல்வோம்.
முன்பெல்லாம், நம் முன்னோர்கள் வழி திருமணத்திற்கு தயாராகும் பெண்கள், குனிந்த தலை நிமிராமல் வந்து மணமேடையில் உட்காருவார். அந்த காலம் எல்லாம் தற்போது, மலையேறிவிட்டது. இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், மணமேடைக்கு வரும் போதே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். ஒரே தூள் கிளப்பும்.
இது போன்ற வீடியோக்கள் பல சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது, மணப்பெண் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
