நடிகை கெளரி கிஷன்
சோஷியல் மீடியா முழுவதும் 96 பட நடிகை கௌரி கிஷன் குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது இவரது நடிப்பில் 'அதர்ஸ்' என்ற படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் இப்படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது தனது உடல் எடை குறித்து அநாகரீகமாக கேள்வி எழுப்பிய யூடியூபர் ஒருவரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார் நடிகர் கெளரி கிஷன். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரவும், பலரும் கௌரிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக 'அதர்ஸ்' பட சம்பந்தமான நிகழ்ச்சியில் கெளரி கிஷன் உடல் எடை குறித்து ஹீரோவிடம் யூடியூபர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த கெளரி கிஷன் நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் சம்பந்தப்பட்ட யூடிபரை பார்த்து, அந்த கேள்வி ரொம்ப அவமரியாதையாக இருந்தது. இருந்தது என்றார். அதற்கு அந்த யூடிபரும் பதிலுக்கு பேச, எனது எடைக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம். எதற்காக அப்படி ஒரு கேள்வி கேட்டீங்க. இதே ஒரு ஹீரோவை பார்த்து இந்த கேள்வியை கேப்பீங்களா? உருவக்கேலி பண்ணுவதை போன்று தான் உங்களுடைய கேள்வி இருந்தது.
நான் குண்டா இருக்கனுமா, எப்படி இருக்கனும் சொல்லி நான்தான் முடிவு பண்ணனும் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். அதே நேரம் அவரை பேச முடியாதபடி யூடியூபர் தொடர்ந்து வாக்குவாதம் செய்தார். அதோடு சுற்றி இருந்த பத்திரிக்கையாளர்களும் கெளரி கிஷனை டார்கெட் செய்தே கேள்விகளைக் கேட்டனர். அனைத்தையும் அவர் கேட்டு விட்டு என்னையும் பேச விடுங்க. நான் என்ன சொல்ல வர்றேன் பேச விட்டால் தானே தெரியும் என்றார். அதோடு இங்கு நான் மட்டும் தான் பொண்ணு. என்னையவே டார்கெட் செய்து கேள்வி கேட்பதை போன்று உள்ளது என்றார்.
இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விஷயத்தில் தைரியமாகவும், பக்குவமாகவும் எதிர்கொண்ட நடிகை கெளரி கிஷனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதோடு அவரின் செயலுக்கும் பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் திரையுலகைச் சார்ந்தவர்களும் நடிகை கெளரி கிஷனுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அந்த நிருபருடைய செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. மற்றும் வெட்கக்கேடானது. இந்த அநாகரீகமான கேள்விகளை நடிகைகள் எதிர்கொள்ள வேண்டியிருப்பது, இன்னும் எவ்வளவு தூரம் தமிழ் சினிமா செல்ல வேண்டும் வேண்டியுள்ளது என்பதைக் காட்டுகிறது என பதிவிட்டுள்ளார்.
மேலும், கெளரி கிஷனுக்கு நடிகை குஷ்புவும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணுடைய எடை எவ்வளவு தெரிந்து கொள்வது உங்களின் வேலை இல்லை. இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று பதிலடி தந்த கெளரி கிஷனுக்கு பாராட்டுக்கள் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் குஷ்பு. இதே போல் நடிகர் கவின், அஞ்சு குரியன் ஆகியோரும் இந்த விவகாரத்தில் கெளரி கிஷனுக்கு சப்போர்ட் ஆய்வு.
இதனிடையில் நடிகர் சங்கமும் இந்த பிரச்சனை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் சில வக்கிரமான நபர்கள் நடிகைகளை நோக்கி ஏளனமாக கேள்வி கேட்பதும், அவமானப்படுத்துவதும் கவலை அளிக்கிறது. எங்கள் சகோதரி ஒருவருக்கு நேற்று நடந்தது, சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு வேறொரு சகோதரிக்கும் அதே நபரால் நிகழ்ந்தது. எதிர்காலத்தில் இது மாதிரியான சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான தேவையான முன்னெடுப்புகளை கலந்தாலோசித்து துவங்குவோம்.
