எங்களுக்குள் சண்டை.. எனக்கு ஃபர்ஸ்ட் நைட்டே நடக்கல.. ஆத்தி அமலா பால் படார்னு போட்டு உடைச்சிட்டாரே!

எங்களுக்குள் சண்டை.. எனக்கு ஃபர்ஸ்ட் நைட்டே நடக்கல.. ஆத்தி அமலா பால் படார்னு போட்டு உடைச்சிட்டாரே!
: ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் அவரை விவாகரத்து செய்துவிட்டு ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இலை என்ற ஒரு மகன் இருக்கிறார். சுமூகமாக அவர்கள் தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் கணவரும், மனைவியும் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஜாலியாக ஒரு பேட்டி கொடுத்தார்கள். இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தலைவா, தெய்வ திருமகள் ஆகிய படங்களில் நடித்த அமலா பால் அவரையே காதலிக்க செய்தார். சினிமாவில் பாரம்பரியமிக்கது விஜய்யின் குடும்பம். எனவே முதலில் இந்தக் காதலுக்கு அவரது வீட்டிலிருந்து சம்மதம் கிடைக்கவில்லை. ஒருவழியாக சம்மதம் பெற்று அமலா பாலை திருமணம் செய்துகொண்டார் விஜய். இரண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதராக இருப்பார்கள் என்றே பலராலும் கணிக்கப்பட்டது. விழுந்த விரிசல்; பெற்ற விவாகரத்து: திருமணத்துக்கு பிறகு சில படங்களில் நடித்தவர் அமலா பால். இப்படிப்பட்ட நிலைமையில் இரண்டு பேருக்குமிடையே சில காரணங்களால் மனஸ்தாபம் ஏற்பட்டது. அந்த மனஸ்தாபம் நாளடைவில் பெரிய விரிசலாகி விவாகரத்தில் முடிந்தது. அந்த விவாகரத்துக்கு பலரும் தங்களுக்கு ஏற்றார்போல் கதையும், திரைக்கதையும் எழுதத் தொடங்கினார்கள். ஆனால் உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை. இரண்டாவது திருமணம்: முதல் மண முறிவுக்கு பிறகு ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார் விஜய். மேலும் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அமலா பால். அமலா - ஜகத் தம்பதிக்கு இலை என்ற மகனும் இருக்கிறார். இந்தத் திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. இரண்டு பேரும் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாவது வழக்கம்.
ஒதுங்கிக்கொண்ட அமலா பால்: அமலா பால் கர்ப்பமாக இருக்கும்போது ஆடுஜீவிதம் திரைப்படத்தில் நடித்தார். மகன் பிறந்த பிறகு ஒட்டுமொத்தமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். முழுக்க முழுக்க மகனை வளர்ப்பதில் கவனத்தை செலுத்துகிறார் அவர். விரைவில் அவர் மீண்டும் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியானாலும் அதற்கான அறிகுறி எதுவும் இப்போதைக்கு தென்படவில்லை என்பதுதான் உண்மை. அமலா பால் பேட்டி: சமீபத்தில்தான் அவர் தனது பிறந்தநாளை குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடினார். இந்நிலையில் ஜகத் தேசமும், அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய அமலா பால், "ஜகத் தேசாய் ரொம்பவே எமோஷனல் ஆனவர். நான் நடித்த மைனா படத்தை பார்த்துவிட்டு தேம்பி தேம்பி அழுதார். நாங்கள் முதலில் செய்தேன் டேட்டிலேயேகூட அவர் அழுதார். அதனால்தான் நான் காதலில் விழுந்தேன் என்று நினைக்கிறேன். மேலும் படிக்கவும்
மாத செலவுக்கு 6.50 லட்சம் கொடுங்கள்.. மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜெய் கிரிஸில்டா தரும் நெருக்கடி மாத செலவுக்கு 6.50 லட்சம் கொடுங்கள்.. மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜாய் கிரிஸில்டா தரும் நெருக்கடி ஃபர்ஸ்ட் நைட் இல்லை ஃபர்ஸ்ட் டே: சொல்லப்போனால் எங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் இல்லை. ஃபர்ஸ்ட் டேதான். ஃபர்ஸ்ட் டே, செகண்ட் டே. நிச்சயதார்த்தம் அன்று எங்களுக்குள் செம சண்டை. சண்டை முடிந்து அப்போதுதான் நான் பேட்ஸ் அப் செய்தேன். பிறகு எமோஷனலாக அப்படியே நடந்தது" என்றார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஆத்தி அமலா பால் இவ்வளவு ஜாலியாகவும், ஓபனாகவும் சீக்ரெட்டை உடைச்சிட்டாங்களே என்ற கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post