எனக்கு ஆண் குழந்தை மேல் ஆசை வந்திருக்கு, ஆனா இப்போ முடியாதே: ஆதங்கத்தை கொட்டி தீர்த்த நடிகை சரண்யா!

தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் சரண்யா, தற்போது பல படங்களில் நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். இந்த ஆசையால் அவருக்கு ஆண் குழந்தை இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
saranya ponvannan நடிகை சரண்யா பொன்வண்ணன், இந்தியத் திரைப்படத் துறையில் குறிப்பாகத் தமிழ்த் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பால் புகழ் பெற்றவர். 1980களில் கதாநாயகியாக அறிமுகமாகி, பின்னர் 'அம்மா' கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர். 1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சரண்யா. தொடர்ந்து பசும்பொன் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்த இவர், இப்போது தமிழ் சினிமாவில், முக்கிய அம்மா நடிகையாக வலம் வருகிறார். அஜித்குமார் தொடங்கி தனுஷ் வரை பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார் சரண்யா. ராம், தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், களவாணி, வேலையில்லா பட்டதாரி மற்றும் கோலமாவு கோகிலா ஆகியவை இவரது குறிப்பிடத்தகுந்த படங்கள் ஆகும். திரைப்படங்களைத் தவிர, இவர் டிசைனிங் மற்றும் ஃபேஷன் டெக்னாலஜி தொடர்பான ஒரு கல்வி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் சரண்யா, 1995-ம் ஆண்டு நடிகர் இயக்குனர், ஓவியர் என பன்முக திறமை கொண்ட பொண்வண்ணனை திருமணம் செய்துகொண்ட சரண்யாவுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். திரைப்படங்களில் பலருக்கும் அம்மாவாக நடித்த சரண்யா ரியல் லைஃபில், ஒரு கண்டிப்பான அம்மாவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்வண்ணன் - சரண்யா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருமே மருத்துவம் படித்துள்ள நிலையில், மூத்த மகள் குழந்தைகள் நல மருத்துவராகவும், இளளையமகள் பொதுநல மருத்துவராகவும் இருக்கின்றனர். இந்நிலையில் ஒருமுறை விருது மேடையில் பேசிய சரண்யா எனக்கு பெண் பிள்ளைகள்தான் அதிகம் பிடிக்கும் என்று இருந்தேன், ஆனால் நிறைய படங்களில் நடிகர்களுக்கு அம்மாவா நடித்துள்ளேன். அதனால் எனக்கே ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் இப்போது முடியாதே, எனக்கு இரண்டும் பெண் பிள்ளைகள். எங்கள் வீட்டு ஆண் பிள்ளை என்றால் அது என் மருமகன்தான் என்று கூறியுள்ளார். மேலும் நடிகைகளை விட நடிகர்களின் தாயாகத்தான் அதிக கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளதாக அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post