திருமண உறவில் துரோகம் செய்வதற்கு பாலின வேறுபாடுகள் இல்லை என்றாலும், ஆண், பெண் இருவரில் யார் அதிகம் களவுறவில் ஈடுபடுகிறார்கள் என்பது கவலைக்குரிய கேள்வியாக பார்க்கப்படுகிறது.
யார் உறவுகளுக்கு அடிக்கடி துரோகம் செய்கிறார்கள் என்பது குறித்து சமீபத்திய தகவல்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அப்படி கள்ள உறவுகளில் அதிகம் துரோகம் செய்வது ஆண்களா? பெண்களா? என்பதை பார்ப்போம்..
ஆண்களா பெண்களா?
திருமண உறவுகளை பெரும்பாலும் பாதிப்பது களவுறவுகளால் தான். திருமணமான ஆண்களில் சுமார் 20 சதவீதத்தினரும் திருமணமான பெண்களில் 13 சதவீதத்தினரும் தங்கள் வாழ்க்கைத் துணையை ஏமாற்றுவதாகக் கூறப்படுகிறது. ஏறக்குறைய 5 திருமணங்களில் ஒரு திருமணத்தில் ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் துரோகத்தை சந்திக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் துரோகம் பாலினம் மற்றும் வயதுக்குழுவிற்கு ஏற்ப மாறுகிறது.
18 முதல் 34 வயதுக்குள் இருக்கும் இளம் வயதினரிரையே துரோகத்தின் விகிதம் குறைவாக உள்ளது. திருமண உறவில் பெண்களைவிட ஆண்களே அதிக பாலியல்ரீதியாக துரோகம் செய்கிறார்கள். திருமணமான ஆண்களில் சுமார் 20 சதவீதம் பேர் பாலியல் ரீதியாக துரோகம் செய்கிறார்கள். அதே சமயம் திருமணமான பெண்களில் 13 சதவீதம் பேர் மட்டுமே களவுறவில் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
அனைத்து வயதுகளிலும் ஆண்களே அதிகம் களவுறவில் ஈடுகிறார்கள். ஆண்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் வேலை செய்யும் இடத்தில்தான் கள்ள உறவை தொடங்குகிறார்கள். அதிலும் இளம் வயதினரைவிட முதியவர்கள் தான் திருமண உறவில் துரோகத்தில் ஈடுபடுகிறார். வயதானவர்கள் தங்களைவிட வயது குறைந்தவர்களுடன் கள்ளவுறவில் ஈடுகிறார்கள். வயது அதிகரிக்கும் போது பெண்கள் துரோகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது.
