பாலிவுட் சினிமாவில் பல போல்டான ரோலில் நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் டாப் இடத்தில் தற்போது நிலைத்து இருப்பவர் தான் நடிகை ராதிகா ஆப்தே.
தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகு ராஜா, ரஜினியின் கபாலி, தோனி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ராதிகா, தெலுங்கு, பெங்காலி, மராத்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.
அப்படி செய்ய சொல்லி
சமீபத்தில் ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகி வெளியாகவுள்ள ராத் அகேலி ஹை: தி பன்சால் மர்டர்ஸ் என்ற ஓடிடி திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேட்டியளித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், தென்னிந்திய சினிமாவில் நிறைய நல்ல திரைப்படங்கள் வருகின்றன. ஆனால் நான் பணியாற்றிய சில படங்களின் படப்பிடிப்பில் மோசமான அனுபவத்தை எதிர்கொண்டேன்.
ஒரு படத்தில் என் மார்பகங்கள் மற்றும் பின்புறம் எடுப்பது தெரிய வேண்டும் என்பதற்காக பேட்(Pad) வைக்கச்சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டனர். அது எனக்கு மிகவும் அசெளகரியமாக இருந்தது.
அதிக பேட்களை வைக்க சொன்னார்கள். அப்போது, வீட்டில் இருக்கும் உங்கள் அம்மாவிடம் இப்படி வைக்கச்சொல்வீர்களா என்று கேட்க நினைப்பேன் என்று ராதிகா ஆப்தே அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அவர் பேசிய விஷயம் தான் இணையத்தில் பேசுபொருளாக மாறி எந்த நடிகரின் படமாக இருக்கும் என்று நெட்டிசன்கள் யூகித்து வருகிறார்கள்.
