திருமணமான பெண்ணின் உள்ளாடை திடீரென காணமல் போனது .. அடுத்து அரங்கேறிய கொடூரம்..
பெங்களூர், டிச. 7: கர்நாடக மாநிலம், பெங்களூர் மாவட்டத்தில் உள்ள யஷ்வந்த்புரா, முத்யாலம்மா நகரைச் சேர்ந்த 32 வயதுடைய நரசிம்மராஜு, பக்கத்து வீட்டு திருமணமான பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டு, அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நரசிம்மராஜு, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். திருமணமாகாத இவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற திருமணமான பெண்ணுடன் நட்பு கொண்டார்.
இந்த நட்பு நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணவேணியின் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில், நரசிம்மராஜு தனது வீட்டின் பின்வாசல் வழியாக வெளியே சென்று, அவரது வீட்டின் பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்து உல்லாசமாக இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
மேலும், பெண்ணின் உறவினர்களுடன் நட்பாகப் பழகியதால், அவர்களது குடும்பத்துடன் வெளியே செல்லும்போது கூட நரசிம்மராஜு அவர்களுடன் சேர்ந்து செல்வார் என்று தெரிகிறது.
இந்நிலையில், ஒரு நாள் தங்கள் வீட்டில் காணமல் போனது கிருஷ்ணவேணியின் உள்ளாடை. சில நாட்கள் கழித்து வழக்கமாக செல்வது போல பக்கத்துவீட்டிற்கு சென்ற கிருஷ்ணவேணியின் மாமியார். மருமகள் கிருஷ்ணவேனியின் உள்ளாடை கட்டிலுக்கு கீழே கிடப்பதை பார்த்துள்ளார்.
இது, இங்கே எப்படி வந்தது..? என்று இருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட கிருஷ்ணவேணியின் குடும்பத்தினர், அவர்களின் செயல்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினர்.
இதை அறிந்து கொண்ட கிருஷ்ணவேணி, நரசிம்மராஜுவிடம் "நம்மை சந்தேகப்படுறாங்க... இதுக்கு மேல நாம பேசிக்க வேணாம்" என்று கூறி, அவரைத் தவிர்க்கத் தொடங்கினார்.
ஆனால், நரசிம்மராஜு தொடர்ந்து அவருக்கு போன் செய்து, "இங்கே எந்தப் பிரச்சனையும் இல்லை... யாரவது கண்டுபிடித்தால் பின்வாசல் வழியாக உன் வீட்டுக்கு சென்று விடலாம்" என்று கூறி தொல்லை செய்து வந்தார்.
கடந்த நவம்பர் 22-ம் தேதி, கிருஷ்ணவேணியின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவர் நரசிம்மராஜுவின் வீட்டுக்குச் சென்று உல்லாசமாக இருந்தார். இதை அறிந்த குடும்பத்தினர், நேரடியாக அங்கு சென்று முதலில் பின்பக்க கதவைப் பூட்டினர்.
பின்னர், இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து, நரசிம்மராஜுவைத் தனியாக அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணவேணியின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

