17 வயது சிறுமியை மனைவியாக்கிய பாலு மகேந்திரா.. தூக்கிட் த*கொ* செய்துக் கொண்ட அவலம்!!
ஷோபாவின் இயற்பெயர் மகாலட்சுமி. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்ததால் ‘பேபி மகாலட்சுமி’ என்று அழைத்தார்கள். இந்தப் பெயருடன் பல பல மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.ஷோபாவின் தாய் பிரேமாவும் ஒரு மலையாள நடிகைதான்.
ஏறத்தாழ 50 மலையாளத் திரைப்படங்களுக்கு மேல் பிரேமாவால் துணை நடிகையாக மட்டுமே நடிக்க முடிந்தது. ‘ஹீரோயின்’ ஆவது என்கிற தனது நிறைவேறாத ஆசையை தன் மகளின் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்.‘பக்கத்து வீட்டுப் பெண்’ என்கிற இயல்பான தோற்றத்தையும் மிகையல்லாத யதார்த்தமான நடிப்பையும் கொண்டு தென்னிந்தியத் திரைவானில் மின்னிக்கொண்டிருந்த இந்த நட்சத்திரம், குறுகிய காலத்திலேயே மறைந்துபோனது சினிமா துறைக்கும் அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்பு.
ஷோபாவின் மறைவையொட்டி, அவரது நினைவாக பாலுமகேந்திரா உருவாக்கிய திரைப்படம்தான் ‘மூன்றாம் பிறை’. நவம்பர் 6, 1980 அன்று ‘மூடுபனி’ வெளியானது. பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்தது. ஷோபா இறந்தபோது, அவரது வயது 17, அதாவது மே 1, 1980 அன்று தூக்குப் போட்டு ஷோபா த*கொ* செய்துகொண்டது.
இவர் இறப்பிற்கும் பாலு மகேந்திராவிற்கும் சம்மந்தம் இருந்ததாகவும்,அவர் மீது ஷோபா தாயரே வழக்கு தொடுத்த கதைகளும் உண்டு. மேலும் பாலுமகேந்திரா பல சர்ச்சைகளையும் புகார்களையும் அவதூறுகளையும் சட்டப் பிரச்னைகளையும் அந்தச் சமயத்தில் சந்தித்தார்.இதனை உண்மைப்படுத்தும் வகையில் எனக்கு எல்லாமுமாக இருந்த மனைவி ஷோபாவுக்கு சமர்ப்பணம் என கூறியிருந்தார்.
