சமூக வலைதளங்களில் கவர்ச்சியான வீடியோக்களை பதிவேற்றி பிரபலமான இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர் இலக்கியா (எலக்கியா), சமீபத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மீது பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் காரணம். என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டான். 6 வருஷமா அவன் கூட இருந்திருக்கேன். நிறைய பொண்ணுங்க கூட பழக்கம், அதை கேட்ட என்னை அடிக்குறான்" என பதிவிட்டு, திலீப் சுப்பராயனின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, இலக்கியா அதிக அளவு ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், சென்னை பூந்தமல்லி அருகே உள்ள இல்லத்தில் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், சிறிது நேரத்தில் இலக்கியா அந்த பதிவுகளை நீக்கிவிட்டு, "All are Fake News" என மாற்றி பதிவிட்டார். இது குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகங்களை எழுப்பியது.
இதற்கு உடனடியாக பதிலளித்த திலீப் சுப்பராயன், தனது அறிக்கையில், "இன்ஸ்டாகிராம் தளத்தில் எனது பெயரைக் குறிப்பிட்டு முற்றிலும் பொய்யான பதிவு பகிரப்பட்டது. பிறகு அந்த பதிவு நீக்கப்பட்டு, 'All are Fake News' என அந்த நபர் தனது பக்கத்திலேயே விளக்கம் அளித்துவிட்டார்.
இருப்பினும், என் மீது காழ்ப்புணர்ச்சியில் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான பதிவை சில ஊடகங்கள் ஆராயாமல் பகிர்ந்து வருகின்றன. இதனால் நானும் என் குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். அந்த பதிவில் எவ்வித உண்மையும் இல்லை, முற்றிலும் பொய்.
இதை மீறி பொய் குற்றச்சாட்டுகள் பரப்புபவர்களை சட்டரீதியாக எதிர்கொள்வேன்" என தெரிவித்தார். இலக்கியா ஏற்கனவே டிக்டாக் காலத்தில் ஆபாசமான மற்றும் அருவருப்பான வீடியோக்களை பதிவேற்றி பிரபலமானவர். டிக்டாக் தடைக்குப் பிறகு இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் "நடனம்" என்ற பெயரில் கவர்ச்சி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இவர் மீது ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த புதிய விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்துடன் விவகாரம் முடிவடைந்ததாக கருதப்பட்ட நிலையில், தற்போது இலக்கியாவின் பழைய சர்ச்சை ஒன்று மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2021-ல் வெளியான ஒரு ஆடியோ கிளிப்பில், இன்ஸ்டாகிராம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா (சுப்புலட்சுமி) இலக்கியாவுடன் பேசுவது இடம்பெற்றுள்ளது. அந்த ஆடியோவில், மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் பாலியல் தொழிலுக்கு பெண்களை அனுப்பி வைப்பதாகவும், இலக்கியாவை அழைப்பதாகவும் ரவுடி பேபி சூர்யா பேசுகிறார்.
ஆடியோவில், "மலேசியாவில் எனக்கு நிறைய கஸ்டமர்கள் இருக்கிறார்கள். ஒரு சிறிய கிராமம் இருக்கிறது, பிரச்சனை இல்லாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். மாதம் எவ்வளவு வேண்டும் என கேளு" என சூர்யா கூற, இலக்கியா "இங்கேயே 2 மணி நேரத்துக்கு 2 லட்சம் வாங்குறேன்.
அங்கு 2 மாதத்துக்கு குறைந்தது 6 லட்சம் வேண்டும்" என பேரம் பேசுவது போல பேசுகிறார். இந்த ஆடியோ அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, ரவுடி பேபி சூர்யா மீது புகார்களும் எழுந்தன.
தற்போது திலீப் சுப்பராயன் விவகாரத்துடன் இணைத்து இந்த பழைய ஆடியோ மீண்டும் அதிக அளவில் பகிரப்பட்டு வருவதால், இலக்கியா மீதான விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ளன.
சிலர் இலக்கியா பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்க முயல்கிறார் எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது.

