10 நாள் பழக்கம்.. ஹோட்டலுக்கு கூட்டிச்சென்று அட்டூழியம்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி...!

ஜனவரி 23ஆம் தேதி மாலையில் ஆணும், பெண்ணும் தனிமையில் சந்தித்துள்ளனர். இருவரும் மணிக்கணக்காக பேசி வந்த நிலையில் அந்த இளைஞன் அப்பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளான்.
ஆந்திர மாநிலத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 22 வயது கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி என்பது கணிக்க முடியாத அளவுக்கு சென்று விட்டது. தொலைதூர தொடர்புக்கு என வித்திடப்பட்ட இன்றைய சமூக வலைத்தளங்கள் பல குற்றங்கள் புழங்கும் இடமாக மாறிவிட்டது. சைபர் கிரைம் மோசடி தொடங்கி பாலியல் வன்கொடுமை வரை சர்வ சாதாரணமாக நடைபெறுவதற்கு அடிப்படை காரணமாக இவை அமைந்து விடுவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக டீன் ஏஜ் எனப்படும் பருவ வயதினர் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம் தான் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது.
ஆன்லைன் மூலம் பழக்கம் அங்குள்ள திருப்பதி பகுதியின் கிராமப்புறத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய நிலையில் சமூகம் வலைத்தளங்களில் அடிமையாக இருந்துள்ளார். இந்த பெண்ணுக்கு ஜனவரி 14ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் கடப்பா மாவட்டத்தில் உள்ள பத்வெல் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவருடன் தொடர்பு மேலும். அந்த நபர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜனவரி 23ம் தேதி மாலையில் ஆணும், பெண்ணும் தனிமையில் சந்தித்துள்ளனர். இருவரும் மணிக்கணக்காக பேசி வந்த நிலையில் அந்த இளைஞன் அப்பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளான். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளான். ஒரு கட்டத்தில் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். உடனடியாக வீட்டுக்குச் சென்று தனது தாயாரிடம் நடந்ததை தெரிவித்திருக்கிறார்.
சிசிடிவியில் காத்திருந்த அதிர்ச்சி உடனடியாக அப்பெண்ணின் தாயார் போலீசில் நடந்த அநீதி குறித்து புகார் அளித்தார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தடவியல் ஆதாரங்களை சேகரித்தனர். சம்பந்தப்பட்ட ஹோட்டல் மற்றும் அப்பெண் தங்கியிருந்த அறைகள் முழுமையாக சோதனை செய்யப்பட்டன. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இளைஞனும், அப்பெண்ணும் ஹோட்டல் அறைக்குள் செல்கின்றனர். பின்னர் அந்த பெண் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் சிறிது நேரம் மேலும் சில இளைஞர்கள் அந்த அறைக்குள் வரும் காட்சிகள் இடம் பெற்றன.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த இளைஞனை போலீசார் கைது செய்தனர். பின்னர் மருத்துவப் பரிசோதனைக்காக ரூயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அந்த இளைஞனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அந்த இளைஞர் சமூக வலைத்தளம் மூலம் பல பெண்களிடம் உரையாடி தனிமையில் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Post a Comment

Previous Post Next Post